இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தன்­னாட்­சியை பெற்றுக் கொள்­வ­தற்­கான நாடகம் மோடி, மைத்­திரி, சம்­பந்தன் ஆகிய மூம்­மூர்த்­திகள் மூலம் இந்­தி­யாவில் அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­கின்றது. இந் நிலையில் அந்த நாடகம் , இன்று இலங்­கையில் சம்­பந்­த­னூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும், எம்.பி.யுமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். 27000 பாடை­யினர் உயிர்­களை அர்ப்­ப­ணிப்பு செய்து மீட்ட நாட்டை காட்டிக் கொடுக்க அரசு முயற்­சிக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார். பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின்...
  இறுதியுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றல் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்…: வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு! இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று 16.05.2016 மன்னார் பேசாலை பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். அவ்விடத்துக்கு விரைந்த வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் சேத விபரங்களை பார்வையிட்டதோடு மக்களுடன் கலந்துரையாடி சேத விபரங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அப்பொழுது மக்கள் தங்கள் வாழ்நாளில் இவ்வாறனதொரு அனர்த்தம் தங்கள் ஊருக்கு...
  முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த சம்பூர் மக்களை நினைவு கூரும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். 2009ம் ஆண்டின் மே 19ம் திகதி நிறைவடைந்த இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வுகளின் ஒருகட்டமாக சம்பூர் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருகோணமலை கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் டெலோ அமைப்பின் நிர்வாகச்...
  யுத்தம் காரணமாக இந்தியாவிற்குச் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த ஈழ அகதிகள் 31 பேர் நாளை மறுதினம் வியாழக்கிழமை தாயகம் திரும்பவுள்ளனர். மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இவர்களில் 18 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது. இவ்வாறு தாயகம் திரும்புகின்ற ஈழக அகதிகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்தியாவிலுருந்து தாயகம் திரும்பி மீள்குடியமரும் அகதிகளுக்கு வடக்கு மற்றும்...
  இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்; இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, இவர்களை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச்...
  தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தலாவ – தம்புத்தேகம ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் இந்த புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதம் தம்புத்தேகம வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பயணிகள் சேவை மட்டுமல்லாமல் தபால் புகையிரத சேவையும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
  சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று கொழும்பில், நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இதனைத் தெரிவித்தார். “தம்மை தெரிவு செய்த குடிமக்களுக்கு நம்பகமாக அரசாங்க அதிகாரிகள் இருக்க வேண்டும் என ஜனநாயகம் கோருகிறது. அந்த நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத்...
  போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கில் விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என பரப்புரை செய்யப்பட்டாலும் அதில் எந்த உண்மைகளும் இல்லை. போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரவே அவர்கள் ஒன்றுகூடுவதாக கூறியுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் புலிகளை...
கினிகத்தேன நாவலபிட்டி பிரதான பாதையில் போக்குவரத்து நடவடிக்கைககள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான பாதையின் மீபிட்டிய  பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மண்சரிவுடன் நிலம் தாழிறங்கியது. இந் நிலையில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என குறித்த மார்க்கத்தில் போக்குவரத்து 17.05.2016 மதியம் 12 மணிமுதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பயனிகளின் நலன் கருதி பஸ் சேவை குறித்த இடத்திலிருந்து நடைபெறுவதாகவும் ஏனைய வாகனங்கள் மாற்று வழிகளில் பயணங்கள் மேற்கொள்ள நடவடிக்கை...