பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல் இம்ரான்கானின் 3-வது மனைவியான புஷ்ரா பீபி தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய 2 வழக்குகளில் தண்டனை பெற்று...
கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பல்வேறு இடங்களில் இவ்வாறு தடுப்பூசி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலையங்கள் மற்றும் அவற்றில் எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொதுச் சுகாதார சேவையின் இணைய தளத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில்...
ஃபின்லாந்து உக்ரைனுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேலும் 188 மில்லியன் யூரோக்கள் இராணுவ உதவியாக அனுப்பப்படும் என்று ஃபின்லாந்தின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிய்வில் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் இரண்டு வருட ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் உக்ரேனிய சீர்திருத்தங்கள் மற்றும் புனரமைப்புக்கான ஆதரவு உட்பட நீண்ட கால ஆதரவை...
தைவானின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
மேலும், தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் 730 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 60 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த...
திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க...
நூருல் ஹுதா உமர்
140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் நேற்று (03) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கையர்களும் 2022ஆம் ஆண்டு சிறையில்...
2019 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முதலாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தங்களது பெரும் தவறு காரணமாக நிகழ்ந்தது என்று நடுவர் மரைஸ் எராஸ்மஸ் (Marais Erasmus) தெரிவித்துள்ளார்.
இவரும் குமார் தர்மசேனாவும் நடுவர் பொறுப்பை ஏற்றிருந்த அந்தப் போட்டி ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பியது.
முதலில் ஆட்டம் சமநிலை ஆனதே நடுவரின் தவறு. இரண்டாவதாக சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமநிலை எட்டியபோது 04 ஓட்டங்களின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.
தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது,...