மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து 8 சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதில் 3 சந்தேக நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம்...
காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில் இல்லாத போது வீட்டை டோசர் கொண்டு தரை மட்டமாக்கியுள்ளார்.
கரந்தெனிய, பஹல மானன என்னும் பிரதேசத்தில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் மகளுக்கு வீடு அமைத்துக் கொள்ள தந்தை...
ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது-எம்.ஏ.சுமந்திரன்
Thinappuyal -
ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேலா மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு இருவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
அதிகார அடிப்படையில் இருவரும் ஒரே நிலையைக் கொண்டில்லாத போதிலும் தமிழ்...
இன்றைய தினமும் நாட்டில் கடுமையான மழை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் சுற்றி நிலவிய தாழமுக்க நிலைமை அகன்று செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை...
கேகாலையில் பாரிய மண்சரிவு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த மண் சரிவு காரணமாக மூன்று பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மண்சரிவு காரணமாக கொழும்பு கண்டி வீதியின் கேகாலைப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வேறும் மாற்று வழிகளைப் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுமாறு...
இலங்கை யுத்தகால புகைப்படத்தை மோசடியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக BJPமீது குற்றச்சாட்டு
Thinappuyal -
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான புகைப்படம் ஒன்றை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மந்தப் போசாக்கு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பத்திரிகைப் புகைப்படம் ஒன்றை காண்பித்துள்ளார்.
உண்மையில் அந்தப் புகைப்படம் கேரள மக்களுடையதல்ல எனவும் இலங்கை அகதிகளினதுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ப.ஜ.க தலைவர் அமித் ஷா இந்தப் புகைப்படத்தை காண்பித்திருந்தார்.
2009ம் ஆண்டு...
யேமனில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காவல்துறை திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென் யேமனின் முக்காலா துறைமுகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பிரசாத் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
எசெக்ஸ் அணியுடன் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது பிரசாத் காயமடைந்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறு உபாதை என கருதப்பட்ட போதிலும் பின்னர் சற்றே பாரதூரமான உபாதை என மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பிரசாத் பங்கேற்க வாய்ப்பு இல்லை என...
நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே தமது ஆதரவு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக அனைத்து இந்திய ரசிகர் மன்ற அமைப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் காரணமாக ரசிகர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட...
இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த 45 கிலோ தங்கத்தை கடற்படையினர் சுங்கப்பிரிவினரிடம் கையளித்த பின்னர் 12 மணித்தியாலத்திற்குள் அதில் 8 கிலோ தங்கத்தினை மீள எடுத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம்...