ஒரு அளவு வரை வளர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் தெரிகிற உடற்பருமன் ஒரு அளவுக்குமேல் நம்மை நமக்கே சுமையாக்கிவிடுகிறது. நோய்களுடைய புகலிடமாகிவிடுகிறது. சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய முதல் புரிதலை ஏற்படுத்துவது தோற்றம்தான். அழகோடு பருமனும் சேர்ந்துதான் தோற்றம் சிறப்பாக வெளிப்படுகிறது. உடலுக்கு சக்தியளிக்கும் விட்டமின், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நுண்சத்துகள் என அனைத்தும் உணவிலிருந்தே பெறப்படுகிறது. இந்த சத்துக்களை உடல் இயங்குவதற்கு பயன்படுத்துவதோடு வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்கிறது. வயதுக்கேற்ப உடல் பருமனும் எடையுமான சராசரி...
சீனாவில் தனது தந்தையுடன் அதிகநேரம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தால் சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி போக்குவரத்து காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் Zunyi நகரில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, தற்செயலாக அந்த பக்கம் வரும் அவருடைய மகள் ரோந்து பணியில் இருக்கும், தனது தந்தையை பார்த்தவுடன் மிகவும் வருத்தமடைந்து கட்டியணைக்கிறார். காவல் துறையில் பணியாற்றும்...
போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த "உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம்' வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- உள்நாட்டுப் போர் காரணமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வசிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 4.08 கோடியைத் தாண்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவு மிக அதிக எண்ணிக்கையாக...
பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை சாதிக் கான் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, இந்த பேருந்துகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய குறைந்தளவு 1.50 பவுண்ட் கட்டணம் உள்ள பயணிச்சீட்டு மட்டும் போதுமானது ஆகும். இந்த வசதி மூலம், இரண்டு பயணங்கள் தூரத்தை...
கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பிற்கு அருகில் உள்ள நபர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடியுள்ளனர். இந்த விபத்தில் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து உருக்குலைந்து சென்றுள்ளது. அருகில்...
சுவிட்சர்லாந்து நாட்டில் காவல் துறையை சேர்ந்த அவரச எண்ணை அடிக்கடி தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுவிஸின் ஜெனிவா நகரில் பெயர் வெளியிடப்படாத 33 வயதான நபர் ஒருவர் வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். இவரது அன்றாட பணிகளில் முக்கியமானது ‘காவல் துறையின் அவசரகால எண்ணான 117 என்ற எண்களை அடிக்கடி தொடர்புக்கொண்டு பொலிசாரை உதவிக்கு அழைப்பது தான்.ஒரு முறை அல்ல,...
பிரித்தானியாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைத்து பேசியதற்காக அந்நாட்டு பிரதமரான டேவிட் கமெரூன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பிரித்தானியாவில் இஸ்லாமிய கொள்கைகளை போதித்து வரும் சுலைமான் கனி என்பவர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் கமெரூன் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அப்போது, ‘இஸ்லாமிய மதபோதகரான சுலைமான் கனி என்பவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்’ என பகிரங்கமாக...
அநியாயத்தை கண்டால் அதை தைரியமாக தட்டிகேட்பவர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது திருட்டு விசிடியை ஒழிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் சொகுசு பேருந்தில் 'விஜய்யின் தெறி' படம் திரையிடப்பட்டதாக,விஷால் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசாரும் அப்பேருந்தின் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் பேருந்தில் இருந்த பல புதிய திரைப்பட சீடிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கத்தி, தெறி பட வெற்றியால் விஜய், சமந்தா இருவரும் வெற்றி ஜோடிகளாக ரசிகர்களால் கருதப்படுகின்றனர். அண்மையில் வெளியான தெறி படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று சமந்தா #AskSam என்ற டாக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் விஜய்யை பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா தெறி டா என்று ஒரு வரியில் விஜய்யை விவரித்துள்ளார். Follow Samantha Ruth Prabhu ✔‎@Samanthaprabhu2 Therrrrrriiiii da...
சட்டமன்ற தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிம்புவும் Vote Song என்ற பெயரில் ஒரு பாடலை இசையமைத்து, வரிகளை எழுதி, விடிவி கணேஷுடன் இணைந்து பாடியும் இருந்தார். இந்நிலையில் இந்த பாடல் வெளிவந்த ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. தேர்தல் குறித்து வந்த பாடல்களில்...