முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதியுத்தத்தின்போது சரணடைவோரைப் பாதுகாப்பதற்கு ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் உதவிகோரிய போதிலும் எவரும் உதவிவழங்க முன்வரவில்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைவோர் தொடர்பில் முழுப்பொறுப்பு வகித்தவரான பஸில் ராஜபக்ச சர்வதேச நாடுகள் செயற்பட்ட முறை தொடர்பாக குற்றம் சாட்டினார்.
தமிழ் மக்கள் மீது உண்மையான பற்று இருந்திருந்தால் அதனை இறதிப்போரின்போது வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே ஜெனீவாவின்...
எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும். எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் வடக்கில் எந்த செயற்பாடுகளும் அமையவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு...
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் வரையிலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் குசல் பெரேராவின் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா இன்று கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே...
மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ .
Thinappuyal -
மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தினரை பழிவாங்க மேற்கொள்ளும் முற்சி அவ்வளவு சுபமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் ராஜபக்ஸக்களை பழிவாங்குவதில் கடும் ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பெசில் ராஜபக்ஸவை ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டில் கைது செய்ததாகவும் தற்போது வேறும் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் அவர்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
பொரளை கொட்டா வீதியில் அமைந்துள்ள வீடே இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.
கோட்டே நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.
வீட்டை சோதனையிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
நிதிச் சலவை செய்தல் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2011, 2012ம் ஆண்டு...
வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் முதல் பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை.
Thinappuyal -
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் முதல் பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.
கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த சமரசேகர தலைமையிலான குழுவினர், தாஜூடீன் மரணம் குறித்த முதல் பிரேதப் பரிசோதனையை செய்திருந்தனர்.
சம்பவம் இரண்டரை ஆண்டுகளின் பின்னரே பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் சமர்ப்பிக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் இரண்டாவது தடவை சமர்ப்பிக்கப்பட்ட...
இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் வழியமைக்கும் என தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்திய விஜயம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரி, சாஞ்சியில் அனகாரிக தர்மபாலவின் சிலை...
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம்
Thinappuyal -
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம் பிரயோகித்தனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட காலப்பகுதியில் பல காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் விசாரணைகளில் தலையீடு செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 20 காவல்துறை உத்தியோகத்தர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
தாஜூடின் கொலை குறித்த சீ.சீ.ரீ.வி கமராக்...
மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .
Thinappuyal -
மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இம்முறை அவர் கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைதியான முறையில் இம்முறை வெற்றி தினம் கொண்டாடப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.இந்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில்...
வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா? பதில் கொடுங்கள் தமிழ் மக்களே!
Thinappuyal -
எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது.
போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்குமுறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக உருவெடுத்தவர்கள், இன்று அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வது வேதனையானது தான்.
ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை தாங்க முடியாதவர்கள் எதிர்கால வாழ்வைத் தொலைத்து, ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டவர்கள் இவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வெளிப்படையான கருத்துப்படி...