இலங்கை பாராளுமன்றில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறியாட்டம்-காணொளிகள்
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர், வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி திசை திருப்ப முயர்ச்சி
Thinappuyal News -
வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்: சுவிஸ் ஆசாமி விவகார அறிக்கையும் சமர்ப்பிப்பு!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது புங்குடுதீவில் வைத்து பொதுமக்களின் ஒத்துழைப்போடு கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை எவ்வாறு வெள்ளவத்தைக்குச் சென்றார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட...
அகில இலங்கை தழிழ்மொழித்தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ள நு.மெராயா தமிழ் மகா வித்தியாலயம்.
Thinappuyal News -
நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் கடந்த செவ்வாயன்று ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போட்டிகளில் பங்குபற்றியுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது போட்டிகளில் பதினாறு முதலாம் இடங்களையும், ஐந்து இரண்டாம் இடங்களையும் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
போட்டிகளில் பங்குபற்றியுள்ள மாணவர்களையும் பயிற்றுவித்துள்ள ஆசிரியர்களையும் நிகழ்ச்சிபொறுப்பாசிரியரையும் அதிபர் திரு.என்.முத்துகுமார் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
க.கிஷாந்தன்
சூர்யா நடிப்பில் 24 படம் உலகமெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் 2200 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதில் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 650 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளதாம்.
இதன் மூலம் ஒரு வெளிநாடு ரிலிஸ் எண்ணிக்கையில் 24 சாதனை படைத்துள்ளது.
ஸ்ருதிஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசி விடுவார். அந்த வகையில் இவரை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் இருந்தது.
இதையெல்லாம் இவர் கண்டுக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் என் கணவர் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.
இதை இவர் விளையாட்டிற்கு சொன்னாரா? என்று தெரியவில்லை, ஆனால், இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றது.
சூர்யா நடிப்பில் நாளை உலகம் முழுவதும் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது.
முன்பதிவு ஆரம்பித்த, சில மணி நேரங்களிலேயே பல காட்சிகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் அப்படி என்ன இருக்கின்றது என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.
முதலில் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதாலே பாதி எதிர்ப்பார்ப்பு படத்தின் டீசரே ஏற்படுத்தியது. அதிலும் பல ஹாலிவுட் படத்தில் பார்த்த டைம் மிஷின் பற்றிய...
நடிகர்கள் சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் என பல வலைதளங்களில் தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டகிராமில் இருந்து காஜல் அகர்வால் நேற்று டுவிட்டர் பக்கத்தை திறந்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் முதல் டுவிட்டாக மகேஷ் பாபுவுடன்நடித்துவரும் பிரம்மோத்சவம் படத்தின் புதிய போஸ்டரை பதிவேற்றியுள்ளார்.
வித்தியா கொலை வழக்கு… சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகப் போவதில்லை சட்டத்தரணிகள் ஒருமித்து எடுத்த முடிவு
Thinappuyal -
வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகப் போவதில்லை என்று ஒருமித்த முடிவினை சட்டத்தரணிகள் சமூகத்தினர் எடுத்துள்ளனர்.
சட்டத்தரணிகளினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11,12 ஆவது சந்தேக நபர்களுடைய வழக்கு விசாரணை புதன்கிழமை(04) மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் எடுத்துக்...
நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட போதே, பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இது தொடர்பான காணொளியை கீழே காணலாம்