சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீதிபதிகள் மற்றம் சட்டவாளர்களின் சுதந்திரத்துக்கான ஐ.நா அறிக்கையாளர், மோனிகா பின்ரோவுடன், அவரது குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சிறிலங்காவின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பாக ஆராயவே இந்தக் குழுவினர் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகள்...
சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் இருந்து செயற்படும், பிரதி பாதுகாப்பு ஆலோசகரான, கொமாண்டர் லொயிக் பிசோட், சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கான வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். சிறிலங்கா வந்துள்ள அவர், நேற்று இராணுவத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி...
பிரான்ஸ் - டௌலஸ் எனும் இடத்தில் நேற்று தொடர் மாடி குடியிருப்பில் 7ஆம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது, எரிவாயு கசிவினால் நிகழ்ந்துள்ளது. இதேவேளை, வீட்டு உரிமையாளர்கள் வேலைக்கு சென்றிருந்தமையால் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன், பொருள் சேதம் ஏற்பட்டதுடன் வளர்ப்பு பிராணியான நாய் உயிர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. புதன்கோள் கடக்கும் நிகழ்வு புதன்கோள் சூரியனின் முன் நகரும் அரிய நிகழ்வு வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.இதை...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி நானுஓயா எடின்புரோ பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வாகனத்தில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர்...
எதிர்வரும் 11ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் மாநாடு ஒன்றில் பங்கேற்கவுள்ளார். லண்டனில் நடைபெறவுள்ள ஊழல்களுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என்ற பெரும்பலானோர் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை பௌத்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மைத்திரிபால மே 13ஆம் திகதியன்று...
கொழும்பு பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன்-கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வேன் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 05.05.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார்தெரிவித்தனர். எனினும் இதில் பயணித்த பயணிகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்காதபட்சம்...
சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 5 இந்தியப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கோசல வர்ணகுலசூரியதெரிவித்துள்ளார். அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன்சந்தேக நபர்களை கல்பிட்டிய பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளதாக அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை தற்சமயம் முன்னெடுத்து வருவதாக கடற்படைபேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
களனி-பட்டிவில தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயனைப்பு படையின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் களனி பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த தீயினால் தொழிற்சாலை பாரியளவில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகத் தவறியுள்ளனர். பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை நேற்றும் அவரது மகள் தேஜானி ராஜபக்சவை இன்றும் ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு இருவருக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. புஸ்பா ராஜபக்ஸ மற்றும் தேஜானி ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால்...