நாட்டில் அதிக வெப்பம் காணப்பட்டாலும் பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய வளிமண்டலவியல் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இந்த நிலைமை குறித்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததனால் எனது கணவர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதனால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து பெரும் சர்ச்சை கிளப்பப்படுகிறது. அவர் தற்போது சாதாரண எம்.பி. என்பதால் அவருக்கு சாதாரண பாதுகாப்பு போதுமானது என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின்...
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில் 600 பீ.ஐ. குழாய்கள் கொள்வனவு செய்யப்பட்டு, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் பத்து லட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் சில ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க விஜயம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் அவருடைய மனைவியின் தாயாரின் உடல் நலம் தொடர்பில் பார்ப்பதற்காகவே அவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா வீசா வழங்காத...
பொதுவாகவே பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும், தனித்துவம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுவே ஆசை. இதற்காக எப்போதும் படி, படிஎன்று சொல்லிக் கொண்டே இருக்க கூடாது, அது அவர்களுக்கு வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தும். இதற்கு பதிலாக அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என பட்டியலிட்டு, அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு,...
நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள்....
அனைவருக்கும் அவரவர் வீட்டை அழகாகவும், மற்றவர் பார்த்து வியக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் அழகை இன்னும் மெருகேற்றி காண்பிக்கும். வீடும் அப்படிதான். வீடு என்பது ஒவ்வொருவரின் மன அமைதியையும் மேம்படுத்தும் ஓர் இடம். ஆகவே அதனை சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. அவ்வாறு இந்த காணோளியில் காண்பிக்கும் பொருட்களை கொண்டு வீட்டை அலங்கரிக்கும் போது சிறப்பான விளைவு...
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் புதனன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் புதனன்று தாக்கல் செய்திருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா...
ஐக்கிய நாடுகள் சபையை திருப்திப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை திருப்திபடுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும், எதிா்வரும் ஜீலை மாதம் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்களை ஒத்தி வைப்பது அரசாங்கத்தின் கொள்கையாக மாற்றமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்...
எங்களுடைய நிபுணர் குழு அறிக்கையில் எந்த இடத்திலும் சுன்னாகம் நிலத்தடி நீரில்  எண்ணெய் கலக்கவில்லை என்று  குறிப்பிடப்படவில்லை. இதை நாம் மிகத் தெளிவாக  குறிப்பிடுகின்றோம். நிபுணர் குழு ஆராய்ந்த விடயங்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால் எண்ணெயில் இருக்கின்ற ஆபத்தான நச்சு மாசுக்கள்தான்  நீரில் கலக்கவில்லை என்பதே. மாறாக எண்ணெய் கலக்கவில்லை என்று நிபுணர் குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அடித்துக் கூறுகின்றார். இன்று...