தேவை என்றால் தொகுதி அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் விண்ணப்பம் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பசிலும் விண்ணப்பம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதனை ஊடகங்கள் நிர்ணயிக்க முடியாது எனவும்,...
வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக இவ்வாறு வாகன இறக்குமதி தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளன.
ஜப்பானிய யெண்ணின் பெறுமதி பாரியளவில் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாவின் பெறுமதி...
அவுஸ்திரேலிய ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.அவுஸ்திரேலிய பிரஜையான நீல் பிரகாஸ் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியே இவ்வாறு ஈராக்கில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்கப்படையினர் நடத்திய தாக்குதல்களில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தீவிரவாத அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு பணிகளில் இந்த நபர் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் கடயைமாற்றிய மிகவும் சிரேஸ்ட அவுஸ்திரேலிய தீவிரவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற வான் தாக்கதல் ஒன்றில் அவுஸ்திரேலிய பெண் தீவிரவாதி...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பிரதமர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
உலக டுவன்ரி20 தர வரிசையில் முதல் தடiவாயக நியூசிலாந்து அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த தர வரிசைப்படுத்தலில் முதல் தடவையாக நியூசிலாந்து அணி இந்த மைல் கல்லை எட்டியுள்ளது.
2012-2013ம் ஆண்டுக்கான பெறுபேறுகளின் அடிப்படையிலேயே தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் உலக சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளது.
132 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலாம் இடத்தல் திகழ்கின்றது.
இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக பாராளுமன்ற மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள்ளும் ஊடகங்களிலும் கலாச்சாரத்தை மாற்றிய போதிலும், பாராளுமன்றில் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஸ கலாச்சாரம் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் மஹிந்த ராஜபக்ஸ கலச்சாரத்தை தோற்கடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸ கலாச்சாரத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் தாம் நிரபராதி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக படுகொலை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் தாம் குற்றமற்றவர் என துமிந்த சில்வா நீதிமன்றில் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் முறையில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் முல்லேரியா பிரதேசத்தில்...
தெறி படம் ஓவர்சீஸில் வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் மலேசியாவில் வசூலில் 10வது இடத்திற்கு வந்துள்ளது.
இந்தியா மதிப்பில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது. மலேசியாவில் கத்தி படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.
இந்த வாரம் 24 படம் வருவதால், இந்த சாதனையை தெறியால் முறியடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
வீரம், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யூ லேகா. இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு இவருடைய பேக்கை யாரோ திருடி உள்ளனர். இதில் இவரின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், பணம் ஆகியவை இருந்துள்ளது.
அனைத்தையும் இழந்து தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் பத்தட்டத்தில் இருந்துள்ளார். பிறகு நடிகை குஷ்பு, நடிகர் கருணாகரன் ஆகியோர் வித்யூவை தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தினைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்தவர் என்கிற பெயர் அவருக்கு இருக்கிறது. அவருடைய ஆதரவாளர்கள் இப்புதிய கூட்டரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, அரசுடன் இணைந்திருந்து செயற்பட்டுவந்தாலும் மஹிந்தவினது பரம்பரையையே அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இவ்வரசு முயற்சிக்கிறது. இரு பிரதான சிங்கள கட்சிகளுக்குள் பிரச்சினைகளை பூதாகரமாகக்காட்டி தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கின்ற...