சமீப காலமாக இலங்கை அணியின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிரடி வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஓய்விற்கு பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் இதுகுறித்து துடுப்பாட்ட வீரரான ஜெகன் முபாரக் கூறுகையில், இலங்கை மிகச் சிறிய நாடு, சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே-வின் ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு பதிலீடாக வீரர்களை களமிறக்குவது என்பது சவாலான விடயம் தான். திறமையான வீரர்களை கண்டுபிடிப்பதற்கு...
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நனோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மிகவும் சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும் என்பதே முதன்மை காரணம் ஆகும். இவ்வாறான முயற்சியின் பயனாக மிகவும் நுண்ணிய வெப்பமானியை கனடாவை சேர்ந்த வேதியியல் நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இவ் வெப்பமானியானது மனித தலை முடியிலும் 20,000 மடங்கு சிறியதாகும். அத்துடன் கணணி புரோகிராம் மூலம் இயங்க வைக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும். இந்த வெப்பமானியை உருவாக்குவதற்கு...
அரசியலில் ஆதாயத்தைத்தேட முனையும் ஒருசில அரசியல்வாதிகள் தமது அரசியலைத்தக்கவைத்துக் கொள்வதற்காக இத்திட்டத்தினுள் மூக்கினை நுழைத்து, வளங்கள் அற்ற பிரதேசத்தில் இந்த வர்த்தக மையத்தினை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசாரார் வளங்கள் அற்ற பிரதேசங்களில் அமைப்பதன் ஊ டாக குறிப்பாக அந்த இடம் இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சியடையும் என்றும், இன்னுமொரு தரப்பினர் தாண்டிக்குளத்தில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படுவதனால் இதனது கழிவுகளை அகற்றும் பணி என்பது பாரிய சவாலாக...
அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. ஏனைய புதிய அப்பிள் கைப்பேசிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் மலிவான இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. தவிர தொடர்ந்தும் iPhone SE கைப்பேசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.இதன் காரணமாக 2016ம் ஆண்டின் எதிர்வரும் காலாண்டுப் பகுதியில் சுமார் 5 மில்லியன் iPhone SE கைப்பேசிகளை வடிவமைக்க அப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளது. ஆரம்பத்தில் மேற்கண்ட காலாண்டுப்...
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் வதியினை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் அமேசானும் ஒன்றாகும். இந் நிறுவனம் அதிகளவில் இலத்திரனியல் சாதனங்களையே விற்பனை செய்து வருகின்றது. அத்துடன் சுயமாகவே பல உப இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது. இந் நிலையில் தற்போது ஒவ்வொருவருக்கும் உதவக்கூடிய நவீன ப்ளூடூத் கண்காணிப்பு சாதனம் ஒன்றினை வடிவமைக்கவுள்ளது. இதன் ஊடாக சாவிகள், பணப் பை, பயண உடமைகளைக் கொண்ட பைகள் என்பவற்றினை மறந்து சென்றாலோ அல்லது தவற...
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கன்டாக்ட் லென்ஸ்களையே (Contact Lense) பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இக் கன்டாக்ட் லென்ஸில் பிற்காலத்தில் தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டன. குறிப்பாக கூகுள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் கன்டாக்ட் லென்ஸினை மிகவும் மெலிதானதாக வடிவமைத்ததுடன், சிறிய ரக கமெராவினையும் இணைத்து சாதனை படைத்திருந்தது. ஆனால் சோனி நிறுவனம் இவற்றினை எல்லாம் தாண்டி கண் சிமிட்டுவதன் மூலம் காட்சிகளை வீடியோ பதிவு செய்து அவற்றினை சேமித்து வைக்கக்கூடிய கன்டாக்ட்...
குழந்தைப் பாக்கியம் அற்று இருப்பதற்கான காரணங்களுள் ஆரோக்கியம் அற்ற விந்தணுக்களும் ஒன்றாகும். இதற்கான வெவ்வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் மனித தோலை விந்தணுக்களாக மாற்ற முடியும் என ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் குழு கருத்து தெரிவிக்கையில் 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பானை சேர்ந்த Shinya Yamanaka மற்றும் பிரித்தானியாவின் John Gordon என்பவர்கள் இணைந்து இளம் வயதினரின்...
கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவினை 65 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் மூலம் பயணங்களை இலகுவாக மேற்கொள்ளல், தேவையான நிறுவனங்களின் அமைவிடங்களை அறிந்துகொள்ளல் போன்ற வசதிகள் பயனர்களுக்கு கிடைத்தன. தற்போது அடுத்தபடியாக Google Trips எனும் புதிய அப்பிளிக்கேஷனை வடிவமைத்துள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது...
சமீபகாலங்களாக யாகூ பற்றி வரும் செய்திகள் அனைத்தும் நல்லவைகளாக இல்லை. யாகூ குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் சிக்கலை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது. இப்போது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்த நிறுவனம் கடும் சிக்கலில் இருக்கிறது. தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலையில் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் ஐந்து தலைமைச் செயல் அதிகாரிகள் மாற்றப்பட்டு மரிஸா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு அப்போது...
  அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா? என்று ‘ஸ்கேன்’ செய்துபார்த்து தெரிவிக்கும் வைத்தியசாலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், பணத்துக்காக ஆசைப்பட்டு, சட்டமீறலான இந்த காரியத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தனியார் வைத்தியசாலைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,...