மன்னார் தேவன் பிட்டி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும், பாடசாலையின் வளர்ச்சியினையும் திட்டமிட்டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாகவும், உடனடியாக குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை உடன் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தேவன் பிட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவன் பிட்டி கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று(3) மாலை அந்தக்...
நாடாளுமன்றத்தில் மோதல்: மூவரிடம் வாக்குமூலம்! வைத்தியசாலையில் உள்ளவரிடம் வாக்கு மூலம் பெற நடவடிக்கை
Thinappuyal -
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் பொலிசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமர சிங்கவிடமும் வாக்குமூலங்களைப் பெற குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளே வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றும் போது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் அவர் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, நபரொருவரால் இடையூறு செய்து வன்முறை ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை...
தந்திரிமலை - போகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தவறுதலாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவும் இதனடிப்படையிலேயே இராணுவத்தினரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தாயான குறித்தப் பெண் தனது வீட்டிற்கு...
பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பால் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் அடிப்படையில், பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்பில் திணைக்கள மட்டத்தில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை விதியின் விளையாட்டு என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடமையாற்றி பயங்கரவாத தாக்குதல்களினால் ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை நீக்கிய, மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பத்து ஆண்டுகளின் பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் விதியின் விளையாட்டாகவே...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவாலயம் வடமாகாண சபையின் பங்களிப்புடன் நிச்சயம் உருவாக்கப்படும்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நல்லாட்சி அரசாங்கம் குழப்பப் போவதில்லை. குழப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதும் இல்லை என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த சந்திப்பி ல் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எழுவர் அடங்கிய குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் எதிர்க்கட்சித்தலைவருடன் பங்கேற்றதோடு குறித்த குழுவில் புதிய சிஹல உறுமய, ஜனசெத பெரமுன, ஸ்ரீலங்கா தேசிய முன்னணி, ஓய்வுபெற்ற ஊனமுற்ற இராணுவத்தினருக்கான அமைப்பு உள்ளிட்ட ஏழு...
சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தம்மை சுட்டுக் கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகைகயில்,
எனக்கு 60 பேர் வரையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அதனை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய 30 ஆக மஹிந்த குறைத்தார்.
இவ்வாறு மிகவும் மோசமாக நடந்து கொண்ட நாடாளுமன்ற...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீள வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்காது போனால் மக்களின் ஆதரவுடன் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த தலைவர் ஒருவரினது...