கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஹொட்டல் உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொத்துரொட்டி, டெவல், ரைஸ் போன்றவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. சோஸ் வகைகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளைக் கொண்டு தயாரிக்கப்படும்...
  என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. வடக்கில் நடப்பவற்றை பார்க்க இதைதவிர வேறுவிதமாக கேட்கத் தோன்றவில்லை. நல்லாட்சி, இனநல்லுறவு, சந்தேகம் களைதல் என சோடிக்கப்பட்ட வார்த்தைகளின் பின்னாலிருந்த கடுமையான முகம் வெளிப்படுகிறதா என்ற கேள்விதான் எழுகிறது. முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் மீளிணைகிறார்கள் என கூறப்பட்ட கதையுடன் வடக்கு அல்லோலகல்லோலப்படுத்தப்பட்டது. சுற்றிவளைப்புக்கள், வீதிச்சோதனைகள் நடந்தன. முன்னாள் போராளிகள் பரவலாக கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விசாரிக்கப்பட்டனர். கண்காணிக்கப்பட்டனர்....
அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்;, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க...
முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஒழுக்காற்று விசாரணை குறித்த அறிக்கை மூன்று நாட்களில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரையில் ருவான் குணசேகர, ஊடகம் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுத்தப்படக்...
ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை பணி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை காரணமாகவே நாட்டில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடக அமைச்சின் செயலாளரது நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஊடக அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விரைவில் நிமால் போபகே நீக்கப்பட உள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் என்ற...
இலங்கை முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லை அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது 12 வயதான சிறுமிகள் கூட திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் சட்டத்தில் இடமுண்டு. இந்த வயது எல்லையை 16 அல்லது 18 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வயதெல்லை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது 16...
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பிரச்சாரம் செய்துவந்த டெட் குருஸ் அந்தப் பிரச்சாரங்களிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இந்தியானாவில் மற்றுமொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு விலகிக் கொண்டுள்ளார். இதன்படி நியூயோர்க்கைச் சேர்ந்த வர்த்தகரான ட்ராம்ப் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஜனநயாக கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்ரன் முன்னிலை வகித்து வருகின்றார். இன்னும் பல தொகுதிகளில் பிரச்சாரப் பணிகள்...
கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் போதிலும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களுக்கு இந்த தரப்பினர் செவிமடுக்கத் தயாரில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை...
தெரிவுப் பணிகளை முதலில் இருந்து தொடங்க நேரிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளராக நேற்று முன்தினம் சனத் ஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவில் தலைவராகவும் உறுப்பினராகவும் சனத் ஜயசூரிய கடமையாற்றியுள்ளார். இலங்கைக் கிரிக்கட் துறைக்கு 100 வீதமான பங்களிப்பினை வழங்க தாம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்க காலமாக இலங்கை கிரிக்கட் அணி பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றமை...
  உலகின் மூலை முடுக்கெங்கும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் அதிசயங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் புரட்சிகளையும் இனவிடுதலைப் போராட்டங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் செய்திகளாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மரியாதை செய்வதுடன் அவர்களை வாழ்த்துவதிலும் பெருமையடைகிறேன். பல்வேறு சவால்களுக்கும் அவமதிப்புக்களுக்கும் முகங்கொடுத்து, முகங்கோணாமல் எடுத்த காரியத்தில் கண்ணாக இருந்து, உயிரைப் பணயம் வைத்து, செய்தி சேகரித்து, அதனை உலகெங்கும்...