தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை இவர் கைது செய்யப்பட்டதோடு, இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி கயல்விழி தெரிவித்தார். தனது தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதில் உரையாடியவர் உங்கள் கணவரை இன்று கொழும்பிற்கு அழைத்துச் செல்கின்றோம் என தகவல்...
  மட்டக்களப்பு – ஆரையம்பதி – சிகரம் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிகரம் கிராமத்தைச் சேர்ந்த தரம் இரண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமி ஒருவரே தனது மாமா முறையான 15 வயது சிறுவனினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் அந்த...
  ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறுவற்கான முயற்சிகளில் வன்னி மாவட்டத்திலுள்ள சில அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மே 18ஆம் திகதியன்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த நினைவுகூறலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வவுனியா பிரஜைகள் குழு மேற்கொண்டுவருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூறுவதற்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த...
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார். மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் விடுத்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 14ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உஜ்ஜெயின் செல்லவுள்ளதாக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன் தெரிவித்துள்ளார். இந்த கும்பமேளா நிகழ்வை...
சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுக்களில், சிறிலங்காவின் முக்கியமான உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சிறிலங்கா வர்த்தக உடன்பாடுகளை செய்து கொண்டிருப்பதுடன், 4000 உற்பத்திப் பொருட்களை தீர்வையின்றி இந்தச் சந்தைகளுக்கு அனுப்பிவருகிறது. சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும்...
  நாட்டில் அதிகரித்துச் செல்லும் வெப்பநிலை காரணமாக, யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்திலுள்ள வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் அனர்த்தத்தில், வீட்டிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள், பணம், நகைகள், வீட்டுத்தளபாடங்கள் என அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும், தெய்வாதீனமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக, நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் முன்னொருபோதும் இல்லாத...
நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அடிதடியானது, ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்றை சபாநாயகர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நீண்ட கால நண்பரான டலஸ் அழகபெருவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த தரப்பினர் தொடர்பிலான பொறுப்புக்களை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கியமைக்கு, டலஸ் அழகப்பெரும எதிர்ப்பு வெளியிட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும். டலஸ் அழகபெரும, மஹிந்த அணியை கைவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இணையவுள்ளதாக கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந்தன. எனினும் குற்றச்சாட்டை...
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும் குற்றவாளியான உதயங்க வீரதுங்க வருகை தந்திருத்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. எனவே நல்லாட்சி அரசாங்கம் நீதியாக செயற்பட்டிருக்குமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை மாணவி ஒருவர் துண்டாடியுள்ளார். குறித்த சம்பவம் மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த குறித்த மாணவி, பெற்றோருடன் நாக்குத் துண்டை எடுத்துக் கொண்டு சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இதனடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார், நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறிய முடிவில்லை என்றும்...