பிரித்தானியாவில் இடம் பெற்ற "சைவதிருக்கோவில் ஓன்றியத்தின் 17 வது சைவமாநாடு" மிக சிறப்பாக கடந்த 30-04-2016 சனிக்கிழமையும் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. சைவத்தமிழ் பாரம்பரிய முறையில் ஓன்றியத்தின் தலைவர் மு.கோபாலகிருஸ்ணன் தலைமையில் பிரதம விருந்தினராக தவத்திரு மருதசலா அடிகளார் பேரூர் ஆதினம் சுவாமிகளும், கலைமாமணி உன்னிகிருஸ்ணன், கலைமாமணி திருமதி தேசமங்கையரசி, கலாநிதி சிறிகணேஸ். யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் லண்டன் கலைஞர்கள், பேச்சாளர்கள், சிவாச்சாரியார்கள்,...
ரஷ்யாவில் நடைபெற்ற பாலைவன லொறி ஓட்டும் போட்டி ஒன்றில் நிகழ்ச்சியை படமெடுக்க வந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Astrashan Oblast பகுதியில் உள்ள பாலைவனத்தில் Zoloto Kagana எனப்படும் லொறிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற லொறி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் மீது மோதி விபத்துள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு அந்த வாகனத்தில் சிக்கிய...
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த பசுமாடுகள் கூட்டத்தில் ரயில் ஒன்று அசுர வேகத்தில் மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Niederbipp என்ற பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் பேர்ன் நகரில் இருந்து InterCity(ICN) என்ற ரயில் லவ்சென் நகரை நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, Niederbipp என்ற பகுதியில் அமைந்திருந்த தண்டாளத்தின் குறுக்கே பசுமாடுகள்...
கனடா நாட்டில் காதலியின் உயிரை காப்பாற்ற நபர் ஒருவர் 1,100 கி.மீ தூரத்தை நடைப்பயணமாக கடந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Tim Michalchuk என்ற நபர் தான் இந்த வியப்பான செயலில் ஈடுப்பட்டு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். டிம்மின் காதலியான ஷானோன் டிக்ஸன் என்பவருக்கு 6 வருடங்களுக்கு முன்பாக ‘ஸ்டெம் ஸ்டெல்’ என்ற நோய் தாக்கியதால், அவரால் தனியாக எங்கும் பயணமாக முடியாது. ஆனால்,...
அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மறுசீரமைப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரவி கருணாநாயக்கவின் நிதியமைச்சர் பதவி, அர்ஜுன ரணதுங்கவின் துறைமுகங்கள் அமைச்சர் பதவி, துமிந்த திஸாநாயக்கவின் விவசாய அமைச்சர் பதவி, விஜயதாஸ ராஜபக்சவின் நிதி அமைச்சர் பதவி...
11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா, பால்மா, மருந்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவைக்கே குறித்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அனைத்தும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல்...
இன்று உலக ஊடக சுதந்திர தினம். இன்றைய நாளில் இலங்கையில் ஊடக சுந்திர வரலாறு குறித்து சிந்திப்பதும் நினைவுகூர்வதும் மிகவும் முக்கியமானதா அமைகின்றது. இலங்கையில் போர் மற்றும் இனமுரண்பாடு தொடங்கிய காலம் தொட்டு ஊடகங்கள் தமது சுதந்திரத்தை இழந்த நிலையில் இருந்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில்  ஊடக சுதந்திரம் என்பது உயிரை அர்ப்பணித்து பணியாற்றும் துறையாகவே கருதப்படுகின்றது.  மே 03ஐ உலக ஊடக சுதந்திர நாள்  (World Press Freedom Day) என்று...
  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு தோட்டப்பிரிவுகளின் ஆலயங்களில் நகைகள் மற்றும் உண்டியல் பணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ருவான் த சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் 02.05.2016 அன்று தெரிவித்தனர். அதேவேளை இந்த கொள்ளையுடன் சம்மந்தப்பட்ட பிரதான சந்தேக நபர்களை எதிர்வரும் ஜீன் மாதம் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நீதிபதி...
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி Premature Babies பிறக்கின்றன. இவர்களுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காமல் போகிறது, இப்படியான குழந்தைகளுக்காக சாம்சுங் நிறுவனம் 'Voice Of Life' என்னும் ஆப்பை தயாரித்துள்ளது. இந்த ஆப் அம்மாவின் குரலையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்து கொள்கிறது. இந்த ஓடியோவை இன்குபேட்டருக்கும், அதில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்றவாறு மாற்றுகிறது. "குழந்தைக்கு அருகில் குட்டி குட்டி ஸ்பீக்கர் வைத்து அந்த ஓடியோவை ஒலிபரப்பினால், குழந்தையிடம் நல்ல...
நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக குறிகிய காலத்திலேயே பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் சீனாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் Huawei நிறுவனமும் ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் கைப்பேசி ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந் நிறுவனம் Mate 8, Mate 9 எனும் இரு கைப்பேசிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இவற்றுள் Mate 9 கைப்பேசியில் தலா 20 மெகாபிக்சல்களைக் கொண்ட டுவல் (Dual) கமெராக்களை...