சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. மன்னாரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட, சிவகரன், இந்த சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு, உதவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நீதிமன்றத்தில் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால்,...
ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்தவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது. தாஜுதீனின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யோசித்த வெளிநாட்டில் காணப்பட்டதனால், மீண்டும் அரசாங்கம் வேறு ஒரு மந்திரத்தை மொழிய ஆரம்பித்தது. அதுதான் ஓம் கிறீன் தாஜுதீன் போ.. போ… தாஜுதீன் போ… போ… இவ்வாறு மஹிந்த சார்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மே...
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதற்கு சிறார்களைப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த ஹாரி சர்ஃபோ எனும் மாணவர் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் கடந்த ஆண்டு இணைந்து சண்டையிட்டு வந்தார். குறுகிய காலத்திலேயே அதிலிருந்து வெளியேற முடிவு செய்த அவர், சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தப்பினார். ஜெர்மனியில் கைதான அவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பெயரில் தற்போது அந்நாட்டுச் சிறையில்...
  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இலவசமாக wifi வழங்குவதாக தெரிவித்தனர். அனால் நாளை முதல் 100 ரூபாய்க்கு தொலைபேசி அட்டை ஒன்றை வாங்கினால், உங்களால் 53 ரூபாய்க்கு மாத்திரமே உரையாடலாம். மீதிப் பணம் நீங்கள் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். அகவே இதன் பின்னர் இளைஞர்களே, யுவதிகளே நீங்கள் காதலிக்கவும் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்பொழுது கிருலப்பனையில் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சி மே தின கூட்டத்தில்...
நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான தகவல்களை அடங்கிய புள்ளிவிபரத்தினை புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியினால் பொரளை கெம்பல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்தக் கூட்டத்தில் 75000 மக்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார், தனது கணவரை கைது செய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தன்னுடைய...
தெஹியோவிட்ட-கனங்கம-பொலிபராவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுமிஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தெஹியோவிட்ட தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு பலியாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த போதே சிறுமி மின்னல் தாக்கத்திற்குஉள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புளத்கோப்பிட்டிய-உந்துகொட பிரதேசத்தில் மின்னல் தாக்கித்திற்குஉள்ளாகி 34 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக புளத்கோப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கரு பரணவிதாரன மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தொடர்பில்...
  இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் இலவசமாக பயணிக்க வழங்கப்பட்ட காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தொழிலாளார் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை தெற்கு வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் வெளிநாடுகளிடம் வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு, போருக்காக செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கிருலப்பனையில் நேற்று நடந்த மே நாள் பேரணியில் உரையாற்றிய அவர், ”எனது அரசாங்கத்தின் காலத்தில் 12 பில்லியன் டொலர்கள் மட்டுமே கடனாக பெறப்பட்டது. இதில் 4 பில்லியன் டொலர் போருக்காகச் செலவிடப்பட்டது. எஞ்சியுள்ள, 8 பில்லியன் டொலரும், அபிவிருத்திப் பணிகளுக்காகவே செலவிட்டுள்ளது. மத்தல விமான நிலையம்,...