பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை முன்னிலைப்படுத்தி என் மீது வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றார் எதற்காக இதனை செய்கின்றார் என தெரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எமது நாட்டில் காணப்பட்ட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமைக்காகவா என்மீது வழக்கு தொடர போகின்றார்களா என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நேற்று கிருலப்பனையில் ஏற்பாடு...
தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததன் வெளிப்பாடே குறித்த நபரின்...
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் அனைத்து மத நிகழ்வு ஒன்று எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் இறுதி நாளான வரும் 14ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளார்.
இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியா அழைப்பு...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கிருலப்பனை சாலிகா மைதானத்தில் ஆரம்பித்து, லலித் அத்துலத் முதலி மைதானத்தில் வரை நடத்தப்பட்ட பேரணியின் முடிவில், நடந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், 47 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
கடந்த வியாழனன்று அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகியன வோசிங்ரனில் மிக முக்கிய சந்திப்பை மேற்கொண்டன. வர்த்தகம், முதலீடு, இரு தரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்...
அன்பான வாசகர்களே ஒரு அறிஞர் கூறிய விடயத்தை ஞாபகபடுத்தியவளாக விடயத்திற்கு வருகின்றேன்.
பொய்மை இல்லாமல் உண்மை இல்லை யாவும் உண்மையாக இருந்தால் இந்த உலகத்தில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை எனவே இந்த உலகத்தை நீங்கள் எப்படி காண்கின்றீர்கள்????
மேலும் என் பனிவான வேண்டுகோள் என்னவெனில் குறிபிடப்படுகின்ற விடயங்களை ஒரு சுயசிந்தனை பார்வையில் உங்கள் மனதில் விதைத்து விடுங்கள் அதன் போதுதான் ஒரு பொதுநல செயற்பாட்டிற்கான பாதையை விளைச்சலாக பெறுவீர்கள். இப்போது...
பொலிஸ் நிதி மோசடி விசாரணைகளை துரித கதியில் நிறைவு செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களால் நேரடியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியில் இன்றிரவு கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் பொலிஸ் நிதி மோசடி பிரிவை ஆரம்பித்து...
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.
இந்த மே தினக் கூட்டத்தில், பாரம்பரிய தேன் எடுத்தல், வேட்டையாடுதல், மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழ் பழங்குடியினர் முதல் முறையாக கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் யாழில் வலம் வந்த சம்பந்தன் – மாவை
Thinappuyal News -
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த ஊர்வரம் இணுவில் கந்தசாமி கோவில் ஆரம்பமாகி மருதனாமடம் இராமநாதன் கல்லுாரியை சென்றடையவுள்ளது.
இதனை தொடர்ந்து மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.