உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???-தனது ஒற்றை உயிருக்காக ஒரு இனத்தையும், ஒரு புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் அழித்து தமிழீழ தனியரசு உருவாக இருந்த வேளை அதையும் கனவாக மாற்றிய மிகப் பெரிய தேச இனத் துரோகிதான் இந்தக் கருணா!!! உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்??? விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னர்… இலங்கைத் தமிழர்களிடையே சாதிப்பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள் (மதப்பிரச்சனைகள் மிகவும் அரிதாகவே இருந்தது) உட்பட...
    ஜனநாயக ரீதியான எனது போராட்டத்தையும் எனது குரலையும் நசுக்கவுமே இந்த கைது நாடகம் நடாத்தப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்து உள்ளார். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான சிவகரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் நேற்றைய தினம் என்னை கைது செய்தனர். கடந்த மாதம் சாவகச்சேரி பகுதியில் கைபற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும்...
அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் கிழக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த ராம், சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த கலையரசன் உட்பட பதினொரு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. அதாவது அறுநூறு பொலிசாரைச் சுட்டுக் கொண்டமையும், யாழ்ப்பாணத்தில் மைத்திரிக்கு...
முன்னாள் போரளிகள் மற்றும் தளபதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்களும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வடக்கு மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது என்பது மீண்டும் மஹிந்த...
பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார். விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வௌிநாட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், கடந்த சில தினங்களாக...
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையமொன்றை நிறுவுவதற்காக வடமாகாணசபை அமைச்சரான சத்தியலிங்கம் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டுக்கொண்டதுக்கு அமையவே இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான அனுமதி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மாறுபாடான கருத்தைத் தோற்றுவித்து குழப்பும் நடவடிக்கைகளில் பல ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் இவ் வர்த்த மையம் அமைப்பது தொடர்பாக கென்சாட் ஒப்புதல்...
தமிழ் சினிமாவில் நாள்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன அதை எல்லாம் தெரிந்து கொள்வதில் மக்களும் ஆர்வமுடன் தான் இருப்பார்கள் ஏனெனில் சினிமாவிற்கு அந்த அளவிற்கு மவுசு இருகின்றது. அவ்வாறு போன வாரம் சினிமாவில் என்ன நடந்தது என்பது பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி இதில் தெறி சாதனை, நெட்டிசன் ரகளை, புது படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன பல தவல்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கி...
  தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள்தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள சந்தியில் 28.04.2016 அன்று மதியம் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றார்கள். சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்முறை கொண்டாடப்படும்...
  ஒற்றுமையை சீர்குலைத்துவிட வேண்டாம்... அதனை மீண்டும் கட்டிஎளுப்புவது கடினம்... அமைச்சர் டெனிஸ்வரன்... கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திக்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ்  65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதிகளின் வேலைத்திட்டங்களை வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக ஆரம்பிக்கும் பணிகள் 27-04-2016 புதன் காலை 10:00 மணியளவிலிருந்து வடக்கு...
  கடந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளை தற்போது தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கைது செய்து வருகின்றது. நல் ஆட்சி என்னும் போர்வையில் முன்னர் இருந்ததுபோல் ஒரு கொடிய ஆட்சியையே இவ்வாரசாங்கமும் மேற்கொள்கிறதா.? என்ற சந்தேகம் எமக்குள் எற்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் (அமல்) அவர்கள் இன்று ஊடகங்களுக்கு வளங்கிய கண்டன...