சிறுதானிய வகைகளில் முதலிடம் வகிக்கும் கம்பு, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
மேலும் வயிற்று புண், மலச்சிக்கலை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
சாதம் ஊற வைத்த தண்ணீர்- தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
மோர் -1 கப்
சாதம்- 1 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் சாதம் ஊற வைத்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கம்பு மாவை போட்டு சுமார் 8 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை...
முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி,சி, கே மற்றும் கால்சியம்,மாங்கனீசு உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.
இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நீரில்அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடிஅளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி,சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கைஅதிகரிக்கும்.
சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது...
துபாயில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர், தங்க நகைகளை திருடிய பின்னர், இலங்கைக்கு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துபாயின் பொதுமகன் ஒருவர் இந்த முறைப்பாட்டை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி தாம் வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த போது குறித்த இலங்கை பணிப்பெண், தமது 40 ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பணிப்பெண் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டமையை தமது மகன் தமக்கு அறியத்...
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் பெட்டிக்கடை ஒன்றை நிர்வாகம் செய்ய பொருத்தமானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளினால் மக்கள் மீது தேவையற்ற சுமைகள் திணிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைமை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மக்கள் மீது வரிச் சுமையை திணித்த இந்த...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை சுவீடனின் வெளியுறவு அமைச்சர்நிராகரித்ததாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு சுவீடன் விசேட உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைதொடர்பிலேயே சுவீடன் அமைச்சர் தமது நிராகரிப்பை வெளியிட்டார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது மத்திய வருமானம் பெறும் நாடாக மாறியுள்ளது.இந்தநிலையில் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று மார்கொட்வோல்ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவை நாட்டின் உயர் தலைமைகளே மேற்கொள்ள முடியும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
மார்கொட், யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தாம், ஹை-கோப் ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தமது வங்கிக் கணக்குகள் இன்னும் விடுவிக்கப்படாமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தனுன தெரிவித்துள்ளார்.
தாம் இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்த போதும் இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று தமது முறைப்பாட்டில் தனுன...
உதய கம்மன்பிலவின் முகத்தை பார்ப்பதற்கும் கூட எனக்கு விருப்பம் இல்லாதுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. காரணம் நான் இந்நாட்டு குடிமகன். நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது? நாட்டை பிளவுபடுத்தும் நபர்களே பொய்க்கதைகளை கூறுகின்றனர்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வடக்கு மற்றும்...
சேறு பூசும் சுவரொட்டிகள், பதாகைகள் ஐ.தே.க மே தினக் கூட்டத்தில் பயன்படுத்தத் தடை! ரணில்
Thinappuyal -
ஏனைய தரப்புக்களுக்கு சேறு பூசும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் என்பனவற்றை காட்சிப்படுத்திவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அர்ப்பணிப்புச் செய்த மக்களுக்கு புதிய நாடு” என்ற தொனிப் பொருளில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த தொனிப் பொருளுக்கு புறம்பான வகையிலான வேறும் எந்தவொரு அரசியல்வாதிக்கு தனிப்பட்ட ரீதியில் சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்தக் கூடாது என...
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சமஷ்டி முறைமையில் தீர்வு காண்பதா? அல்லது ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண்பதா என்பது தொடர்பில் பாரிய சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறைமையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடன் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மறுபக்கம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமஷ்டி முறைமையில் தீர்வு காணமுடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு சாத்தியம்...
மக்களின் பிரச்சினைகளை திசைதிருப்ப அரசாங்கம் சூட்சுமமான சதி! டளஸ் எம்.பி. குற்றச்சாட்டு
Thinappuyal -
கிருலப்பனை மற்றும் காலி மேதினக் கூட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் பிரச்சினைகளை திசை திருப்ப அரசாங்கம் சூட்சுமமான சதியொன்றை முன்னெடுத்துள்ளதாக டளஸ் அழஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழஹப்பெரும கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுமக்கள் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் அவற்றுக்கு தீர்வு காணும் எந்த வழிமுறையும் அரசாங்கத்திடம்...