எதிர்க் கட்சித்தலைவர் சிங்கள இனத்தவராக இருந்திருந்தால் இராணுவ முகாமுக்குள் சென்றமை தொடர்பில் எவரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள்.
நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளே இதனை பூதாகரமாக்கி வருகின்றனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
சம்பந்தன் இராணுவமுகாமுக்குள் சென்றது தவறாக இருந்தால் அவரை முகாமுக்குள் அனுமதித்த இராணுவத்தினரையே இடை நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில்...
சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.
சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25ம் திகதி முதல் மே 6ம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் இதுவரை மாத்தளை மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயுதங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு ஆயுதமும்...
ஒரே கட்சியினால் இரண்டு மே தினக் கூட்டங்களை நடாத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே தினமன்று இரண்டு கூட்டங்களை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளாதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் நினைக்கின்றேன் மே தினமன்று இரண்டு மே தினக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று. இது வழமையானது ஒன்றே.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் ஏனையவர்களும் இணைந்து கொள்வார்கள். அதில்...
பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் விநாயகம், கபில் மாஸ்டர், முகுந்தன், தேவன் மற்றும் சிரஞ்சீவி மாஸ்டர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள்...
ஊழல், மோசடிகள் நிறைந்த காட்டுத்தர்பார் நடத்தும் ஒரு அரசை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஒரு சூழலை இல்லாமல் செய்வதே எனது முதல் இலக்கு.
அதன் முதற்படியாகவே 19 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன பொலிஸ், அரச சேவை ஆணைக்குழுக்களை நேற்று சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றை மேலும் பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடினேன்.
எமது...
நடப்பு நிதியாண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை முப்பத்தி மூவாயிரம் கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு- செலவுத்திட்ட அறிக்கையில் 49937.6 கோடி ரூபா துண்டுவிழும் தொகையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்களின் காரணமாக அரசாங்கத்தின் எதிர்பார்த்த வருமானத்தில் வீழ்ச்சி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு , நலனோம்புகைத் திட்டங்கள் மற்றும் முன்னைய...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும், காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களை இழந்து இன்றும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான மீள்குடியேற்றம் என்பது நல்லாட்சி...
கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் ஐந்து வாகனங்கள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கு அண்மையில் இவ்வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Go to Videos
Massive vehicle accident in Colombo
வீதி சமிஞ்ஞையின் பிரகாரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த வீதியூடாக பயணித்த வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதியதையடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சுமார்...
நாடெங்கும் உள்ள ஆயிரம் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான, பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்திருக்கிறார்.
இந்த முறைப்பாடுகளில் 65 வீதமானவை பொதுமக்களின் முறைப்பாடுகளை அசட்டை செய்தல், பாரபட்சமான விசாரணைகளும் தொடர் நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பானவை என அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 467 எனவும் இந்த வருடம் மார்ச் 15ஆம் திகதி...
காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பிரதம செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் இந்தக் கூட்டத்துக்கு வருபவர்கள் ஏற்பாடு செய்யும் பஸ்களுக்கான கட்டணங்களைச் செலுத்தவேண்டும் எனவும், அரச உத்தியோகத்தர்கள் எக்காரணம் கொண்டும் அரச வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி நிபந்தனை விதித்திருப்பதாக...