பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாடகைக்கு பெற்றுக்கொண்ட அதிசொகுசுக்காரில் மூன்று இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினைக் கடத்திய சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சிறைச்சாலை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் மூன்று கைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன்.
அதிசொகுசுக் காரில் ஹெரோயின் கடத்தப்படுவதாக பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து...
எதிர்க்கட்சித் தலைவர் முன் அறிவித்தல் இன்றி இராணுவ முகாமிற்கு சென்றிருக்கக் கூடாது – ருவான்.
Thinappuyal -
எதிர்க்கட்சித் தலைவர் முன் அறிவித்தலின்றி இராணுவ முகாமிற்கு சென்றிருக்கக் கூடாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களுக்கு செல்லும் முன்னதாக அறிவித்தல் வழங்கிவிட்டு செல்வது பொருத்தமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாமிற்கு விஜயம் செய்வதற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு முன்னரேனும் விஜயம் பற்றி இராணுவத்திற்கு கட்டாயம் அறிவிக்க வேண்டுமென இராணுவத்தினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு...
நாட்டில் மீளவும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்ட, அரசியல்சாசன மற்றும் அரசியல் நிலைமைகளில் சாதகமான தன்மையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்ப அரசியலுக்கோ, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் வீடியோ ஒன்றை பதிவேற்றி அதன் ஊடாக ஜனாதிபதிக்கு இந்த நபர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஏ. சுகத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய போது இந்த நபரை அதிகாரிகள் கைது...
கடல் வழிப்பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை – அரசாங்கம்.
Thinappuyal -
கடல் வழிப் பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்ப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடல் வழிப்பாலம் அல்லது சுரங்கப் பாதையின் ஊடாக இரு நாடுகளையும் இணைப்பது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பற்றற்ற ரீதியிலோ எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும் உலக வங்கி இதற்கான உதவிகளை...
ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பற்றிய சில உண்மைகளை அம்பலப்படுத்த நேரிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு தாம் ஆட்களை திரட்டி வருவதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவளிப்பது தமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விமல் வீரவன்சவின் அனுமதி தமக்கு...
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் முன்னாள் மருமகன் தானுன திலக்கரட்னவினால், நீதி அமைச்சருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹை கோர்ப் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்ட காலத்தில் முடக்கப்பட்ட தமது வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தை தொடர்ந்தும், நீதி அமைச்சர் முடக்கி வைத்திருப்பதாக தானுன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தாம்...
அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்ச்சைக்கரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டமானது புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் ஊடாக பெரும்பான்மையான புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட கோரிக்கைகள் எல்லையில் வைத்தே நிராகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது யுத்தம் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் அடிப்படை மனித உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக உரிமைசார் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைகளின் போது அவசரகாலத்தை பிரகடனம்...
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் டெஸ்ட் தலைவராக கேன் வில்லியம்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு அணியை வில்லியம்ஸ் வழிநடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நியூசிலாந்து அணியின் சர்வதேச ஒருநாள், டுவன்ரி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வில்லியம்ஸ் வழிநடத்த உள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் 29ம் தலைவர் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் பிரன்டன் மெக்கலம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, அணிக்கான டெஸ்ட் தலைவர் யார் என்பது...
பொதுவாகவே, மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு.
இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.
அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில்...