நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. புதிய உடைகளில் 100-க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும், இந்த உடைகளின் சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக கினோலோன்ஸ் மற்றும் அரோமேட்டிக் அமைன்ஸ் என்ற இரு இரசாயனங்கள் பொலியஸ்டர் உடைகளில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் டெர்மடிடிஸ் என்கிற அலர்ஜி...
    தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ லக்ஸ்மன் தலமையில் பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு இன்று(27.04.2016) மதியம் 2.30 மணியளவில் யாழ் நகரில் உள்ள இந்திய...
  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று புதன்கிழமை காலை நகுலனின் தந்தை மற்றும் மனைவி ஆகியோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது நகுலன் நேற்று செவ்வாய்கிழமை காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கைது...
அப்புகாமி என்று ஒருவர் வந்தாலும் அவர்களுடைய மனோபாவம் மாறப்போவதில்லை-வி.எஸ்.சிவகரன்        
உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படை பிரிவின் வல்லமையை பெருக்கிக் கொண்ட விதம் மற்றும்...
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏழு வருடத்துக்கு முதல் சொன்ன பதிலையே இப்பொழுதும் சொல்கிறது என பெண் ஒருவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போதே அப்பெண் இவ்வாறு கூறியுள்ளார். காணாமல் போயுள்ள தனது கணவர் தொடர்பில் தகவல்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக தாம் வருகை தந்த போதும் தனது கணவர்...
வடக்கு மாகாணத்தின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உடனான சந்திப்பின்போதே இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த திங்கள் கிழமை கொழும்பில் நடைபெற்ற மாதாந்த மாகாண...
தற்போது நடைபெற்று வரும் யோசிதவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடற்படை தரப்பில் யோசித மீது வழக்கு தொடப்பட்டு விசாரணைகள் நடைபெறும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தற்போது யோசித மீது இரண்டு வழக்குகள் பற்றியே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. ஒன்று யோசித கடைற்படையில் இணைவதற்தற்கான தகுதிகள் அவருக்கு இருந்தனவா என்பது தொடர்பிலும், மற்றையது கடற்படையில் இணைந்த...
அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகி உள்ளார். இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர், வீட்டிற்கு வெளியில் அவரை அழைத்து, சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், கையிலும் முதுகிலும் தொடையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தெரியவருவதாவது 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்பவரின் வீட்டிற்கு, இன்று காலை சென்ற சில...