காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த திங்கட்கிழமை இரவு கைதான, காவற்துறை புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது...
விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில், நேற்று செவ்வாய்க்கிழமை (26.4.16) மாலை 4 மணி முதல் தோண்டும் பணி, ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாபுலவு வீதியிலுள்ள லூத்மாதா சந்தியில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, அதற்கு முன்னாள் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்த மண் கிணற்றுக்குள் போட்டு, மூடியதாக, தமிழீழ வைப்பகத்தில்...
அண்மையகாலமாக தமிழ் மக்களின் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்து வருபவரும், தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான சிவகரன் அவர்கள் 27.04.2016 அதாவது இன்று மன்னாரில் வைத்து இரு வெள்ளை வானில் வருகைதந்த புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், ஒரு வெள்ளை வான் சிவகரன் அவர்களின் இல்லத்திற்குச்சென்று வீட்டாரிடம் சம்பவத்தை தெரிவித்துவிட்டுச்  சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை)
ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ரஷ்யாவில் உள்ள சைபீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற ஒரு ஏழைச் சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என தீர்மானித்த அவர் கையில் உள்ள சிறிய சேமிப்புடன் கடந்த 1990ம் ஆண்டில் அவுஸ்திரேலியா நாட்டில்...
  கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 1990 ஆம் அண்டு ஜூலை மாதம் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின்...
  நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவே கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
  திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இரகசியமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் காலணித்துவ நாடாக இலங்கையை மீண்டும் கொண்டு செல்ல முயற்சிகள் இடம்பெறுகின்றன. திருகோணமலை துறைமுகத்தை...
  கண்டி – யாழ்ப்பாணம், A9 வீதியில் இன்று (27) அதிகாலை கொள்கலன் தாங்கிய வாகனமொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இருவர் காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ரத்தோட்டை, உக்குவளை பிரதேசத்திலுள்ள மர ஆலை ஒன்றுக்கு மரம் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில், அளவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒரு சில செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது உடலுக்கு கேடு விளைவிக்கும். உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால்,...