கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளி்யிட்டுள்ள அவர், ”போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிடவே, இரா. சம்பந்தன் அந்தப் பகுதிக்குச் சென்றார்.
ஏ-9 வீதிக்குக் கிழக்காக அமைந்துள்ள...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்வில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடக்கில்...
கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் முன்அனுமதி பெறாமல் நுழைந்ததாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தேசிய பாதுகாப்புச் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தலைமையில் நடக்கவுள்ள தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று...
சமஸ்டி ஆட்சிமுறை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பெறுமானம் கிடையாது என்று, சிறிலங்காவின் கல்வி அமைச்சரும், ஐதேகவின் பிரதிப் பொதுச்செயலருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
”இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு போன்றவற்றில், வடக்கு மாகாணசபையின் சமஸ்டி தீர்மானம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்த தீர்மானம் சட்டரீதியான பெறுமானமற்றது. இது பயனற்றது.
சிறிலங்கா அதிபரோ, பிரதமரோ நாட்டைப்...
நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்!
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உளரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அவசியம் பற்றிய அறிக்கைகள் அண்மைக் காலமாக ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துகின்றது.
இவ்வாறு அறிக்கைகளை விடுகின்றவர்கள் முஸ்லிம் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா?நிராகரிக்கப்பட்டவர்களா ? அல்லது மாற்று மதத்தவர்களின் தயவின் மூலம் அரசியல் செய்பவர்களா? இதயசுத்தியுடன் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றார்களா? அல்லது தங்களது எதிர்கால அரசியல் பிழைப்புக்காக காய் நகர்த்துகின்றார்களா?
கடந்த காலங்களில்...
விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை சார்ந்தவர்களைக் அரசாங்கம் கைது செய்வது அடுத்த போருக்கான ஆயத்தமா?
Thinappuyal -
அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனாய்வுத்துறையினர் செயற்பட்டு வருவதால் அவர்களுடைய செயற்பாட்டை முடக்குவதற்காக அரசாங்கம் மேதினத்திற்கு முன்னர் கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதகெதியில் மேற்கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் விசேட புலனாய்வுப் பிரிவினராகக் கருதப்பட்ட நகரப் புலனாய்வு, படையப் புலனாய்வு, உள்ளகப் புலனாய்வு, வெளிக்களப் புலனாய்வு, இரகசியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு, கட்டமைப்புப் புலனாய்வு, தேசியப் புலனாய்வு, அரசியல்ப் புலனாய்வு, மத்திய புலனாய்வு என பன்னிரண்டு புலனாய்வுப் படைப்பிரிவுகள் இயங்கிவந்த நிலையில்...
வள்ளுவர் புரத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு பொதுநோக்குமண்டபம் திறந்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு, வள்ளுவர் புரத்தில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 01 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், வள்ளுவர் புரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை, 26-04-2016 செவ்வாய் மாலை 4.00 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக...
காலை 9.00 மணிக்கு (27.04.2016) இராணுவத்தால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கு எதிராகவும், அவைகளை விடுவிக்க கோரியும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த பொதுமக்களுக்கான பதினேழு ஏக்கர் காணி, சுதந்திரபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகள், நாயாறு பிரதேசத்தில் உள்ள காணிகள் என பல காணிகளை இராணுவம் அடாவடித்தனமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும், பெருந்திரலான...
கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி அவர்கள் விடுதலைப்போராட்டம் தொடர்பாக வழங்கிய சிறப்பு செவ்வி…
Thinappuyal News -
யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி ஒருவர் சிவில் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் காலை விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த...