முப்படையினரின் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் முப்படையினரதும் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கியிருந்த போதும் இந்த சம்பள உயர்வில் படையினர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக...
மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்படும் என சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் மயப்படுத்துவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் யோசனை முன்வைத்துள்ள சில நிறுவனங்களில் மூன்று சீன நிறுவனங்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் இவ்வாறு தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் இவ்வாறு பணம் அழிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பக்தாத்தில் அமைந்துள்ள அமைப்பின் பண வைப்பகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக இதே நோக்கத்தில் விடுதலைப் புலிகளிள் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ராம் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் என்பவர் ராமின் நெருங்கிய சகா என்றும் இருவரும் இணைந்து...
நமது உடல் பலவீனமாய் இருந்தால் முட்டை சாப்பிட சொல்லி அறிவுறுத்துவர். அதிலும் சிலர் பச்சை முட்டை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறுவதுண்டு. தமிழகத்தில் பூப்பெய்திய பெண்களுக்கு பச்சை முட்டை குடிக்க சொல்லி அறிவுறுத்துவர்.
ஆனால் இது எல்லாம் மிகப்பெரிய தவறாம். இதனால் நமது உடலுக்கு மிகப்பெரிய தீங்கு நேரும் என எச்சரிக்கிறார் இந்த பெண் மருத்துவர். பச்சை முட்டை சாப்பிடுவது பாம்பு விஷத்துக்கு சமம் என்று எச்சரிக்கிறார்.
அதுமட்டுமல்ல பிறந்த...
விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத் தளபதி நகுலன் கடத்தப்பட்டார்!
Thinappuyal News -
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் இனந்தெரியாத நபர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீர்வேலி, கந்தசுவாமி கோயில் தெற்குப் பகுதியில் வசித்துவந்தார். முன்னாள் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் சிறப்புத் தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதி பிள்ளை சிவமூர்த்தி என்பவரே இன்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.
நேற்று மாலை இவரது வீட்டுக்குச் சென்ற சிலர் இவரை விசாரித்துவிட்டு சென்றுவிட்டு மீண்டும் இன்று...
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளன எனவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது ஜின்னாவால் தனிநாடு கேட்கப்பட்டு...
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு…
Thinappuyal News -
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு...
முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு ஜீவநகர் குளத்தடியில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால், நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்திற்க்கமைவாக குறித்தொதுக்கப்பட்ட மாகாண...
முல்லைத்தீவு மாவட்ட கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான விசேட சந்திப்பு – வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்…
Thinappuyal News -
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்ட சங்கங்களை 26-04-2016 செவ்வாய் மாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களும், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், மாகாண கிராம அபிவிருத்தி...
வட்டுக்கோட்டை பிரகடனமும் பாலமுனை களியாட்டமும்!!!
நவீன ஆட்சி முறை அறிமுகத்துக்கு பின் பல நாடுகளில் சிறுபான்மையினர் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதை அல்லது அந்நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளதைக் காணலாம்.
இது ஒரு விதி விலக்கு என்ற அடிப்படையில் அமைந்தாலும், பல்லின, பல்கலாச்சார தன்மை கொண்ட நாடுகளின் அரசியலில் சிறுபான்மை சமூகத்தினர் தம் அரசியல் இருப்புக்காக இணக்க அரசியல் நடத்துவதையும் இது சாத்தியமாகாத நிலையில் அல்லது சிறுபான்மை என்ற ஒரே...