கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன. கடந்த வாரம் வடக்கு மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்ட ஆளும் கட்சி (தமிழரசுக்கட்சி) உறுப்பினர்கள், வடக்கு மாகாண விவசாய,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபையை முடக்குமளவுக்கு செயற்பட்டிருந்தனர். உண்மையில் வடக்கு...
  இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. அவ்வாறான கருத்துக்களிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்வைக்கப்படவுள்ள அல்லது கிடைக்கவுள்ள அரசியல் தீர்வு இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ்தான் நிகழவுள்ளது. இதற்கான ஒரு வகை மாதிரியாகவே தாம் ஒஸ்ரியன் அரசியல் யாப்பை...
  கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமொன்றிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி பிரவேசித்ததாக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தாம் அவ்வாறு அத்துமீறி பிரவேசிக்கவில்லையென்றும் மக்களது காணிகளை பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   இராணுவ முகாமிற்குள் அத்துமீறி சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ”இராணுவத்தின் 57ஆவது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள, வடக்கு தமிழர்களுக்கு...
  யாழ்ப்பாணத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து உடல நலன் குறித்து விசாரித்துள்ளனர். இதன்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் சுகவீனமடைந்து சகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
  இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரின் விசித்திரமான நடத்தை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. இவரின் பெயர் ரமேஸ் பாபு ஆகும். இவர் தற்போது உயர் தொழிலதிபர்களில் ஒருவரானலும் இன்னும் தனது வியாபார நிலையத்தில் முடி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை அனைவரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
  சர்வதேச நாடுகளை நம்பியதால் தான் போராட்டம் பின்னடைவை கண்டது அதற்கு இந்த சமாதானப் பேச்சு சிறந்த உதாரணம்  
ஜெய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் சென்னை 28 இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெய். ராட்ஸன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் சி.வி. குமார் தயாரிக்க இருக்கிறார். ராட்சஸன் என்ற பெயர் அறிவிக்கப்பட்ட உடனே இப்பெயர் டுவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் சிறிது நேரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் இது நம்ம ஆளு படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். நடுவில் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பாண்டிராஜ் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி இந்த வாரத்தில் அறிவிக்க இருப்பதாகவும், படத்தை பார்க்கும் போது 100 முறையாவது கண்டிப்பாக சிரிப்பீர்கள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக விஷால் நடிகர் சங்கம் மூலமாகவும், தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாகவும் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் 68 வயதான கவிஞர் காளிதாசன் 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவ செலவுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனை அறிந்த விஷால், தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். இத்தொகையை காளிதாசனின் மனைவி திலகவதியிடம் விஷால்...
சூர்யா நல்ல விஷயங்களுக்காக மற்றவர்களை பாராட்டுவதில் இருந்து எப்போதுமே தவறியது இல்லை. தற்போது சூர்யா, சமந்தா கூட்டணி 24 படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் அஞ்சான் படத்தை விட இதில் தங்களுக்குள் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், அதில் சமந்தா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார். அதோடு சமந்தா படங்களை தேர்வு செய்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளார். விக்ரம் குமாருடன் அவர் ஏற்கெனவே பணியாற்றி இருப்பதால் இந்த...