ஆரோக்கியமான உணவுகள் என நினைத்துக் கொண்டு நீங்கள் சாப்பிடும் சில வகை உணவுகளிலும் கெடுதல்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டு 7 உணவுகளில் சில ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தாலும், அதனை சில காரணங்கள் கருதி நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் அல்லது அளவோடு சாப்பிடலாம்.
சாண்ட்விச்
காலை உணவாக நாம் சாண்ட்விச்சினை சாப்பிடுகிறோம், ஆனால் அவற்றில் சேர்க்கப்படும் முட்டை மற்றும் இறைச்சிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.சாண்ட்விச் தயாரிக்கப்படும்போது அதில் பயன்படுத்தப்படும்...
முறையான காலணிகளை அணியாமல் இருப்பது உங்கள் நடையை மாற்றும், மேலும் நீங்கள் சமநிலையில் நடக்க முடியாமல் தவிப்பீர்கள்.
முதலில் நீங்கள் தேர்வு செய்யும் காலணியின் அளவு சரியாக இருப்பதை நீங்கள்உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் கால் பாதங்களைவிட பெரியதாக இருக்கும் காலணிகளை நீங்கள் அணியும் போதுஉங்கள் கால்கள் பார்ப்பதற்கு நன்றாகஇருக்காது.
அதே வேளையில்உங்கள் கால் பாதங்களை மிகவும் இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் காலணிகளை நீங்கள் அணிந்தால் இரத்த ஓட்டம் தடைபடும்.
உங்களின் கால்பாத அளவினை சரியாக...
சமீபத்திய சறுக்கலுக்கு இலங்கை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கண்டிப்பாக பதிலளிப்பர் என்று குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிபிசி-யின் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சங்கக்காரா, எங்களிடம் பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் முதல் தரப் போட்டிகளில் சிறந்த கட்டமைப்பு என்பது அவசியம்.
அவர்களின் தரம், மனத்திறன், குணம் என அனைத்தையும்...
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால்- நடப்பு சாம்பியனான நிஷிகோரி (ஜப்பான்) மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ரபெல் நடால் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை...
இரு தினங்களுக்கு முன்னர் திருக்கோயில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட முள்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக செயற்பட்டு வந்த ராம் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டார் இது தொடர்பாக திருக்கோவில் பொலிசில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே உத்தியோகபூர்வமாக தாங்கள் அவரைக் கைது செய்திருப்பதாக இலங்கைப் புலனாய்வாளர்கள் அறிவித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஆட்சிக் காலத்தில் பதினொராயிரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அந்த...
ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடந்த 18வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் பஞ்சாப்பை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் மீது கிரிக்கெட் சாதனைகளை சேதப்படுத்தல், உடை விதிமுறையை மீறுதல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டது. இது ஐபிஎல் விதிப்படி லெவன் 1 குற்றமாகும்.
அவர் தனது தவறை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு போட்டி கட்டணத்தில்25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக சக வீரர்...
வங்கதேசத்தில் டாக்கா பிரிமியர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் நேற்று முன் தினம் நடந்த ஒருநாள் போட்டியில் மொகமதீன் ஸ்போட்டிங் கிளப்- பிரதர்ஸ் யூனியன் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மொகமதீன் ஸ்போட்டிங் கிளப் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு285 ஓட்டங்கள் எடுத்தது. உபுல் தரங்கா, நஸ்முல் ஹொசன் மில்லன் தலா 70 ஓட்டங்களும், அணித்தலைவர் முஸ்தபிஜூர் ரஹீம் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் 286 ஓட்டங்களை...
கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய மறுத்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் சர்வதேச போட்டிகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கருப்பர், வெள்ளையர் இன சர்ச்சை நீண்டகாலமாக உள்ளது. கறுப்பர் இனத்தவருக்கு அணியில் தடை விதித்ததால் 1970ல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தடைவிதித்தது.
பின்னர் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில் 1991ல் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு தென் ஆப்பிரிக்க...
டெங்கு நோய் ஒழிப்பிற்கான புதிய ஊசி மருந்து தொடர்பில் நடைபெறும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கைக்காக 10 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ள, இதேவேளை தென் ஆசிய நாடுகளுள் தெரிவு செய்யப்பட்ட ஒரே நாடு இலங்கை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கைக்காக இலங்கை கையொப்பம் இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி...
கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் மீனவ மக்கள் தமது நிலங்கள் மட்டுமல்ல வாழ்வாதாரம் தந்த கடல்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளோம் என்று கூறி இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் கொக்கிளாய் முகத்துவார களப்பிற்கான இணை நல்லாட்சித் திட்ட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
அதில் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பணிப்பாளர்...