சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ் அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.
இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது அமைப்பை உளவு பார்த்த 4 பேரை ஐ.எஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர்.
பின்னர் அவரது உடல்களை சிலுவையில் அறைந்து...
உலகை உலுக்கிய ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை அந்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் பறித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் உள்ள தன்னாட்சி மாகாணமான பவேரியாவில் Tegernsee என்ற நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று 71 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், 1933ம் ஆண்டு ஹிட்லரை ஜேர்மனியின் சான்சலராக நியமித்த அப்போதைய ஜானதிபதியான Paul von Hindenburg...
எங்கள் ஆட்சியில் சூரியன் மறைவதில்லை என்ற பேரரசுக்குரிய இங்கிலாந்தின் நீண்டகால ராணியாக விளங்கும் பெருமைக்குரியவர் விக்டோரியா ராணி இரண்டாம் எலிசபெத்.90 வயதை அடைந்திருக்கும் அவரது முழுப்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி.
தந்தை ஆறாம் ஜார்ஜுக்கும் தாய் எலிசபெத் போவெஸ் லியோனுக்கும் மகளாக 1926, ஏப்ரல் 21 ம் திகதி லண்டனில் பிறந்தார்.
இளமையில் வீட்டிலேயே வரலாறு, மொழி, இலக்கியம், இசை உட்பட்ட கல்வியை தாயார் மற்றும் கவர்னரின் மேற்பார்வையில் பயின்றார்.
எலிசபெத் இளமையிலேயே...
தற்போது உலகையே ஆட்டிக்கொண்டிருக்கும் விடயமாக மாறியுள்ளது பனாமா பத்திரம் என்பது யாரும் மறுக்கமுடியாத விடயமாகும்.
இந்தநிலையில், குறித்த மோசடியில் இலங்கை நபர்களும், மாட்டிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயத்தை “டிரான்ஸ் பெரன்ஸி ஸ்ரீ லங்கா” எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இது தற்போது வரை நிருபிக்கப்படாவிட்டாலும் அதனை உரியமுறையில் விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும். என இந்த நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் சான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த பத்திரிகையில் உலகின் பல்வேறு பிரபல்யங்களின் பெயர்கள்...
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் வங் தூ ச்யேங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட 15 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், சீன மற்றும் இலங்கை முதலீடுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் 10 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட...
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நஜீமை...
இன்றைய தேதியில் உலகை ஆட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு விவகாரமாக மாற்றம் பெற்றுள்ளது யாதெனில், அது உல்லாசத் தீவுகளின் சட்டவிரோதமாக முதலிடப்பட்டிருக்கும் பணமேயாகும்.
உலகின் பல நாடுகளிலுமுள்ள 2 லட்சம் கம்பனிகளும் 14 ஆயிரம் தனியார்களும் இந்த விவகாரத்தில் சிக்குண்டுண்டு தவிர்க்கின்றார்கள்.
15க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் முதற்பலியாக ஐஸ்லாந்துப் பிரதமர் பதவி துறந்துள்ளார் என்பது உள்ளிட்ட விடயங்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா பகிர்ந்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இரண்டு கடற்படை வீரர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு அமெரிக்காவில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனது வீட்டில் இவர்கள் சமையல்காரர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படை வீரர்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தோட்டக்காரர்களாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் சமையல்காரர்கள்...
ஓ காதல் கண்மணி வெற்றிக்கு பிறகு மணிரத்னம் பழைய உற்சாகத்துடன் தன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
இப்படத்தை வழக்கம் போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படத்தில் முதன் முறையாக மணிரத்னம், ஒளிப்பதிவாளர்ரவிவர்மனுடன் கைக்கோர்க்கவுள்ளார்.
நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் பேவரட் ஹீரோயின். இவர் கால்ஷிட்டை வாங்க பலரும் தவம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று, கலகலப்பு-2ம் பாகத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்க, சுந்தர்.சி இயக்கவிருப்பதாக ஒரு செய்தி உலா வந்தது. இதை நம் தளத்திலேயே உறுதிப்படுத்தாத தகவலாக கூறியிருந்தோம்.
ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்க, குஷ்புவின் டுவிட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதோ அந்த டுவிட்..