போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம்...
  முல்லைத்தீவில் கடும் மழை பெய்து சுமார் நான்கு மாதங்களிற்கு மேல் கடந்து தற்போது கடும் வெப்பம் நிலவி வருகின்றபோதும் வற்றாப்பளை கண்ணகை ஆலய வளாகத்தின் நுழைவிடத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து நில மட்டத்திற்கு மேலாக சுமார் 2 உயரத்திலிருந்து கிணற்றுக் கட்டில் உள்ள குழாய் மூலம் தற்போதும் தொடர்ச்சியாக நீர் வெளியேறிய வண்ணம் இருக்கின்றது. இதற்கு அண்மையில் எந்தவொரு நீர் நிலைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து...
  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், அரசியலமைப்பு சீர்திருத்தம், மற்றும் அமைதியான, செழிப்பான, நல்லிணக்கமான எதிர்காலத்தை உருவாக்க, இலங்கை மக்களின் ஆதரவை அமெரிக்கா கோருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல்...
  முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ள விவகாரம் அவையில் நேற்று சூடுபிடித்திருந்தது. நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார். பாதுகாப்புக் குறைப்புத் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது...
  தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அளுத்கம விகாரையில் நேற்று வழிபாடுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கொஞ்சமாக தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது முற்றிலுமாக இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், மகிந்த ராஜபக்சவின் பேச்சாளரான ரொகான் வெலிவிட்ட, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், மகிந்த ராஜபக்சவின்...
கடந்தாண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை, அச்சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையின் போது, வேண்டுமென்றே கொலை செய்தமை தவிர்ந்த குற்றங்களுக்காக – உதாரணமாக போதைப்பொருள் குற்றங்கள் – மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு உதாரணமாக வழங்கப்பட்டுள்ள 12 நாடுகளில், இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது 3 மரண தண்டனைகள், இவ்வாறு...
  டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவு​தீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னி​லையில் யானையை வைத்து மரண தண்ட​னையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை யானைக் காலால் மிதித்துக் கொல்ல தண்டனை அளித்து இருக்கிறார். முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர், யானையை வைத்து மரண தண்டனை வழங்கியதைப் பற்றி பிரெஞ்சுப் பயணி பெர்னியர் தனது குறிப்பில் பதிவுசெய்துள்​ளார். முகலாயர் ஆட்சியில் யானைகளுக்கு...
  மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து...
  இளம் பெண்களுக்கு சவுக்கடியை நிறுத்தி வைத்து என்னை பதட்டமடைய வைத்துவிட்டார் சவுதி அரசர். சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்று ஏன் நாங்கள் ஒப்புகொள்ளவதில்லை என்று தெரிகிறதா? . ஏன் என்று கேட்பது தவறில்லை. அழகிய இனிய மொழிகளில் இஸ்லாத்தை விலக்கத்தானே நான் இங்கே இருக்கிறேன். தாராளமாக கேளுங்கள். அந்த காலத்தில் பெண்கள் ஒட்டகம் ஓட்டியிருக்கிறார்களே என்று காஃபிர்கள் ஆரம்பிப்பார்கள். ஒட்டகம் ஓட்டுவதும் கார் ஓட்டுவதும் ஒன்றா? ஒட்டகத்துக்கு நான்கு கால்கள் உண்டு....
  பாலியல் வன்முறை கொலை குற்றம்  இவைக்குறிய தண்டனை இதுதான் சவுதியரபியாவில் இதுபோன்று இலங்கையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பாலியல் வன்முறைகளை தடுக்கலாம்-காணொளிகள்