யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை. பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில்...
வடமாகாணத்தின் நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய கிராமங்களில் உள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அகற்றுமாறு வடமாகாண உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் நிராகரித்துள்ளார். கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் மீனவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு, நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சரிடம் உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை நிராகரித்த அமைச்சர் குறித்த சிங்கள...
இனவாதத்தை தூண்டுபவர்கள் அரசியல்வாதிகளே என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷனில் இடம்பெற்ற தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் மாநாட்டில் கலந்துக் கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஆலயங்கள், விகாரைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒருபோதும் இந்த இனவாதம் பற்றி பேசப்படுவதில்லை. மாறாக சில அரசியல்வாதிகளே இந்த இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எல்லா மதங்களும் சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்வது பற்றியே...
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உத்தியோக பூர்வமாக காலை 09.30 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் மற்றும் சித்தாண்டியில் அமைந்துள்ள கால் நடைத் தீவன உற்பத்தி தொழிற்சாலையையும் மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்து...
வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து வடமாகாண ஆளுநர் கேட்டறிந்து கொண்டதுடன், தேவைகள் குறித்தும் அறிந்து கொண்டார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த போதே இது தொடர்பில் கவனம் செலுத்தினார். வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, மாவட்ட மட்டத்தின் ஒவ்வொரு திணைக்களத்திற்கும் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், மாவட்டத்தில்...
உனுப்பிட்டிய - வனவாசல பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் புறக்கோட்டை - ரம்புக்கன ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. மேற்படி விபத்தில், ரயில் மிதிபலகையில் தொங்கி கொண்டு வந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ரயிலுடன் மோதுண்ட டிப்பர் வாகனத்தில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். விபத்துக்குள்ளான  டிப்பர் பாதுகாப்பற்ற கடவையில் சென்றுள்ளமையினாலேயே...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங்...
கடந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் மக்கள் மத்தியில் பீதியை விதைத்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீளவும் ஆட்சி கைப்பற்றும் நோக்கில் போர்ப் பீதியை மக்கள் மீது திணிக்க முயற்சி;க்கின்றனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதனால் நாட்டில் மீளவும் போர் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இரண்டு கடற்படை வீரர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு அமெரிக்காவில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனது வீட்டில் இவர்கள் சமையல்காரர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு கடற்படை வீரர்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தோட்டக்காரர்களாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் சமையல்காரர்கள்...
போர் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுககையில், காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். எனினும், போரின் போது வேறும் நபர்கள் குறித்த காணியில் குடியேறியிருந்தால் அவர்களிடமிருந்து காணிகளை மீளப்பெற்றுக் கொள்வது சரியானதல்ல. ஏனெனில், அந்தக் காணியில் தற்போது வசிப்பவர் இருக்கும் நிலைமையை கருத்திற்கொள்ள வேண்டும். பணம் படைத்தவர்கள், ஏழைகளை...