அம்பாறை திருக்கோவில் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இனியபாரதியினால் காணிகள் பலாத்காரமாக கையேற்கப்பட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இந்தக்குற்றச்சாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் சுமத்தினார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக முன்னாள் அரசாங்கத்துக்கு உதவியளித்தநிலையிலேயே இனியபாரதியினால் இந்த காணி அபகரிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தின்போது இனியபாரதி, ஆயுதமுனையில் செயற்பட்டுவந்தார்.
இன்று அவர் அங்குள்ள மக்களின் வீடுகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் ஹேரத் குற்றம் சுமத்தினார்.
எனவே அரசாங்கம் இந்தவிடயத்தில் தலையிடவேண்டும் என்று...
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் மே மாதம் ஒர் தினத்தில் நடத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி...
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, நாட்டுக்கும் மக்களுக்கும், இன்றைய யுகத்திற்கும் ஏற்றதுமான, அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு நேற்று முன்தினம் நிகழ்ந்தேறியுள்ளது.
அதுதான் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாறியமையாகும். இது இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும், மக்களின் விமோசனத்திற்கும் அடித்தனமாக அமையும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நாடு 1948ம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சோல்பரி யாப்புடன்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது.
அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலகொட அத்தாதஸ்ஸி தேரரின் மறைவினால் ஏற்பட்டுள்ள அஸ்கிரிய பீடாதிபதி வெற்றிடத்திற்கான தெரிவு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
அஸ்கிரிய பீடாதிபதி பதவியை பெற்றுக் கொள்ள இரண்டு உபபீடாதிபதிகள் முயற்சித்து வருகின்றனர்.
பதுளு முதியங்கன ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி வரகாகொட ஞானரதன மற்றும் சொலஸ்மஸ்தனாதிபதி வென்டருவே உபாலி போன்ற மாநாயக்க தேரர்களே இவ்வாறு பதவியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
22ம் அஸ்கிரிய பீடாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையே இன்று மாலை நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களைப் போன்று பெரும்பாலும் ஒரு...
அதி சொகுசு வாகனமொன்றை கொள்வனவு செய்வது குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்ய 350 லட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
எனினும், பி.எம்.டபிள்யு. செவன் சீரிஸ் ரக வாகனமொன்றை கொள்வனவு செய்ய இந்த நிதி மோதுமானதல்ல என நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த ரக வாகனமொன்றை கொள்வனவு செய்ய...
அவுஸ்திரேலியாவுடன் நீண்டகால உறவை மீண்டும் இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப்பை சிட்னியில் சந்தித்த போது இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி முதல் நேற்று வரை சமரவீர அவுஸ்திரேலியாவில் விஜயத்தை மேற்கொண்டார்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்ற பின்னர் அமைச்சர் அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுடன் சமாதானத்தையும் கொண்டு...
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை அரசின் ஆட்சியுரிமைச் சட்டமூலம் ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. நாமல் ராஜபக்ச பாராளுமன்றில் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முப்பது வருட பயங்கரவாத...
நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட முக்கிய குழுக்களைச் சேர்ந்த 36 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை,மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இக்குழுக்களால் பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 32 தோட்டாக்களுடன் 2 மெகஸின்கள் ,4 ரி 56 ரக துப்பாக்கிகள், 4 கைத்துப்பாக்கிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வருடம் பெப்ரவரி...
ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 60 இணைய தளங்களை முடக்குவது குறித்து அராசங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான இந்த இணைய தளங்கள் பலவற்றை பல நாடுகள் தடை செய்துள்ளன.
எனினும் இந்த இணைய தளங்களின் பல, ஐரோப்பிய நாடுகளின் இணைய நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 44 இணைய தளங்களை இந்தியா முடக்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 45 குடும்பங்கள் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில்...