11 மில்லியனுக்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ளமையால் உலகளாவிய ரீதியிலுள்ள பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரகசிய ஆவணங்களில் இலங்கையும் உள்ளதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உலகில் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த கணக்குகள் தொடர்பான...
பழம்பெரும் சிங்கள திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் 97 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் பிதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிங்கள கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  மொனறாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாறு பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி தொழிற்சாலையொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 14 துப்பாக்கிகள், ரவைகள், இவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர், தமது வீட்டின் ஒரு பகுதியில் இரகசியமான முறையில் குறித்த துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளதாக மொனறாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்த...
இனந்தெரியாதவர்களினால் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் சம்பவமொன்று, நேற்று அதிகாலை மூன்றரை மணிக்கு, பதுளை புறநகர்பகுதியில் இடம் பெற்றுள்ளது. பதுளைப் பகுதியின் வெலிக்கேமுள்ள என்ற இடத்தின் 39ஏ என்ற இலக்கத்தையுடைய வீடொன்றே இவ்வாறு கைக்குண்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற பதுளை எரிபொருள் நிலைய முகாமையாளரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மூவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்றைய இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி அவர்களின் வீட்டிற்கே,...
தமிழ் சினிமா சமீப காலமாக பல இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் காமெடி வேடங்களில் நடித்தவர் பிரபு. இவருக்கு திடிரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவருக்கு அஜித்குமார், தமிழ் செல்வன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் மலையகத்தில் நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது. இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள், வரலாற்றுமிக்க கோயில், விகாரை, பாலங்கள், முஸ்லிம்பள்ளி வாசல், பிள்ளையார் கோவில், கிருஸ்தவ தேவாலயம் உட்பட பல்வேறுப்பட்ட ஞாபக சின்னங்கள் தற்போது வெளியில் தோன்றுகின்றன. இதனை பார்வையிடுவதற்கு நாளாந்தம் பெரும் திரளான மக்கள்...
டேரன் சமி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அவர் கூறுகையில் “நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் கூட நிர்வாகம் குளறுபடி செய்தது. இதனால் ஒட்டு மொத்த அணி சீருடை...
அடிலெய்ட் டெஸ்டில் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மிட்செல் ஜான்சன், கோஹ்லியின் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண செயல்பாட்டை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அதிரடி காட்டிய கோஹ்லி 51 பந்தில் 82 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார். ஆனால் தான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று...
ஏ.ஆர்.ரகுமான் உலகம் முழுவதும் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார். ஆனால், இலங்கையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என கடும் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல பகுதிகளில் போஸ்டர் அடித்தனர். இதனால், தற்போதைக்கு இலங்கையில் இசை நிகழ்ச்சி செய்யும் எண்ணத்தை ரகுமான் கைவிட்டுள்ளாராம். இச்செய்தி அங்கு உள்ள இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.