தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து நடிகர்களும் முதலில்நயன்தாரா கால்ஷிட்டை வாங்குவதில் தான் குறியாகவுள்ளனர். ஏனெனில் இவர் நடித்தாலே படம் ஹிட் ஆகிவிடுகின்றது. இந்நிலையில் சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க இவருக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் செய்யவுள்ளார்களாம். ஏற்கனவே பாஸ்(எ)பாஸ்கரன், ராஜா ராணி என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த ஜோடி ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கின்றது.
அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9.3.1 இனை அறிமுகம் செய்திருந்தது.இப் புதிய பதிப்பினை iPhone 6S, 6S Plus கைப்பேசிகளில் நிறுவி பயன்படுத்தும்போது பாரிய குறைபாடு ஒன்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை கடவுக் குறியீடு (Passcode) இன்றியே பார்வையிடக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் iPhone 6S மற்றும் 6S Plus கைப்பேசிகளில் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை...
வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் நீர்ச்சத்து, சர்க்கரை குறைவாக இருக்கும்.இதில் கரோட்டீனாய்டு என்ற நிறமி இருப்பதே இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம். கேரட், தக்காளிக்கு அடுத்து சிவப்பு கொய்யாவில் இந்த நிறமி அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பழம் என்றால் அது சிவப்பு கொய்யா தான், இது டைப்-2 நீரிழிவு நோய் வருவதை தடுப்பதுடன் அதிகப்படியான நார்ச்சத்து சர்க்கரையை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் சி அதிகம்...
அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை.இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே தடுத்து அழகிய தட்டையான வயிற்றை பெறுவதற்கு பின்வரும் நடைமுறைகளை கையாளலாம். உரிய நேரங்களில் உணவை உட்கொள்ளல் இன்று அனேகமானவர்கள் வேலைப் பழு காரணமாக நீண்ட நேரம் உணவினை உள்ளெடுக்காலம் இருக்கின்றனர். இவ்வாறு இருப்பதனால் உடலில் இன்சுலின் அளவு...
மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் இரு முஸ்லிம் இளைஞர்களால் வானொன்றில் கடத்திச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்;படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்களும் 13, 19 வயதுடைய இளம் பெண்கள் ஆகும். குறித்த வயதுடைய இரண்டு பெண்களையும் சம்பத்திற்கு முதல் தினமே வாகனேரியில் வைத்து வான் ஒன்றில் ஏற்றிச் சென்று தூர இடத்துக்கு கொண்டு சென்று...
பிரபல நடிகர் சூர்யா, ‘எஸ்-3’ என்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில் ஏற்றி அவர்களை சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சூர்யா ‘எஸ்-3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில்...
  முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014 இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர்கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர் என்பவர் இது தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை அப்பட்டமாகத் திருடித்தான் முருகதாஸ் கத்தி படத்தை எடுத்தார் என்று குற்றம் சாட்டினார். அது தொடர்பாக தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் மதுரையில் ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது....
  ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் (SLPL) இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இலங்கை கிரிக்கட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது விடயம் தொடர்பாக தெரியவந்தது. எனினும் குறித்த போட்டிகளின் அமைப்பு தொடர்பாக கிரிக்கட் நிறுவனத்தினால் இறுதி முடிவு எட்டப்பட்டில்லை. பெரும்பாலும் குறித்த போட்டிகள் அடுத்த ஆண்டில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் (SLPL)...
  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பதில் கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இராதாகிருஷ்ணன் பதில் கல்வி அமைச்சராக தனது பணியை முன்னெடுக்கவுள்ளார். இலங்கையின் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி பேசும் கல்வி இராஜங்க அமைச்சராக இதற்கு முன்னர்...
  இலங்கையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடமும் 22.8 வீதத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த வருடம் மார்ச் மாதம் வரை 157,051 உல்லாச பிரயாணிகளின் வருகை தந்ததாகவும் இவ்வருடம் மார்ச் மாதம் வரையிலும் 584,818 உல்லாச பிரயாணிகள் வருகை தந்திருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. முதல்...