தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான, பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டபோது, பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி இவ் உத்தரவை பிறப்பித்தார்.
பிள்ளையான், பிரதீப் மாஸ்டர்...
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அனைவரையும் கவர்ந்த ஒரு விடயம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கொண்டாட்டம் தான்.அவர்கள் பிராவோவின் சாம்பியன் பாடலுக்கு நடனமாடி தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடினர்.
அவர்களுடன் மகளிர் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கொண்டு நடனமாடினர்.
இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானப் பணிப்பெண்களும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுடன் இணைந்து சாம்பியன் பாடலுக்கு நடனமாடினர்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும் அவர்கள் சிக்சர், பவுண்டரி, விக்கெட் போன்று கைகளை...
முல்லைத்தீவு, துணுக்காய் சிறாட்டிக் குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகளை, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (04) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, பஸ் சாரதி கைது செய்யப்பட்ட அதேவேளை, வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தப்பித்துச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பற்ற மரக்குற்றிகள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் மாங்குளம் பொலிஸ்...
மாணவி மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒரு இலட்சம் ரூபாய் இரு சரீரப்பிணையில் விடுதலை
பரீட்சை மண்டபத்தில் வைத்து மணவியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரான ஆசிரியரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி ஒரு இலட்சம் ரூபாய் இரு சரீரப்பிணையில் விடுவித்தார்.
நேற்று (05/04/2016) மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பாக...
விமானத்தை மோதச் செய்து 150 பேர் உயிரிழக்க காரணமான விமானியை அவரது குடும்பம் ஆதரித்துள்ளதற்கு பாதிப்புக்குள்ளான குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த நினைவஞ்சலி குறிப்பு தான் அங்குள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் ஆல்ப்ஸ் அருகே 150 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உள்ளிட்ட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்....
சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் குடியேறியுள்ள அகதிகளை கிரீஸ், துருக்கி நாட்டுக்கு திரும்ப அனுப்பிவருகின்றது.சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் தஞ்சம் கோருகின்றனர், ஜேர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் தஞ்சம் அளித்தாலும் மற்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் பாரீஸ் மற்றும் பிரெஸல்ஸில் நடந்த தாக்குதல்களால் கடுமையான நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே ஐரோப்பிய...
மலேசிய நாட்டை சேர்ந்த ஓரின சேர்க்கையாளரை தங்கள் நாட்டில் அகதியாக வசிக்க கனடா அனுமதி வழங்கியுள்ளது.
மலேசியாவை சேர்ந்தவர் ஹாசிம் இஸ்மாயில். இவர் கனடாவின் Winnipeg பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
ஹாசிமுக்கு ஓரின சேர்க்கையில் நாட்டம் அதிகம். மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது குற்றம் என்பதால் மலேசியா திரும்பினால் தனக்கு தண்டனை கிடைக்கும் என அவர் பயந்தார்.
மேலும், மலேசியாவை சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு கொலை மிரட்டலும் விதித்தனர்.
இதற்கிடையில் ஹாசிம் ஓரின சேர்க்கையாளர்...
லண்டனில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் ஏலம் விடப்படவுள்ளது.இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மன்னர் பரம்பரை ஒன்று தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது.
இவர்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த நகைகளை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.
நெக்லஸ், மாங்காய் மாலை, நவரத்தினங்கள்- வைரங்கள் பொறித்த ஒட்டியானம் உட்பட பழங்கால நகைகளை, பிரபல ஏல நிறுவனமான பான்ஹாம்ஸ் மூலம் ஏலம் விட தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து ஏல மையத்தின் இந்திய மற்றும் இஸ்லாமிய...
வட கொரியாவின் ஜனாதிபதியான கிங் ஜாங் உன் இறந்துவிட்டதாக டுவிட்டரில் காட்டுத் தீ போல் தகவல்கள் பரவின.உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி அதனை பரிசோதித்தும் அண்டை நாடுகளுக்கு கடும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் அமெரிக்காவை அழித்து விடுவோம் என எச்சரித்த வட கொரியா, தென் கொரியாவுக்கு எதிரான வீடியோவையும் வெளியிட்டது.
இந்நிலையில் டுவிட்டரில் வட...
அமெரிக்க கடற்படையை சேர்ந்த நாய் ஒன்றுக்கு சிறந்த சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 12 வயதான லூக்கா என்ற நாய்க்கு “Dickin Medal” வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றியதற்காகவும், வெடி மருந்துகளை மோப்பமிட்டு கண்டுபிடித்த காரணத்திற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடற்படையை சேர்ந்த நாய் ஒன்று இவ்வகையான விருதை பெறுவது இதுவே முதன்முறையாகும்.
மேலும் ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்த போது, 30 பவுண்ட் எடையுள்ள வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளதுடன் தனது...