எல்லை முனியான்டி திடலில் பஞ்சம் பிழைக்க வந்த சீமை
வட்டவலை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
தென்னாட்டு தமிழர்கள் பெருந்தோட்ட பயிர்செய்கைக்காக இலங்கைக்கு வந்த துயரம் நிறைந்த நெடுங்கதையை கொண்ட இந்நூல் வெளீயீட்டு விழா 10.04.2016 ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
மலைய சமூகத்தின் கடந்த கால வரலாற்றை சொல்லும் சுமைதாங்கி...
கிளிநொச்சி பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, கிராம சேவையாளர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளனர்.
அதன்படி குறித்த பகுதியில் மது அருந்தப்பட்ட தடயங்கள் மற்றும் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடன்...
நுவரெலியா மாவட்ட தனியார் குத்தகைகாரர்கள் மற்றும் ஊழியர்கள் நுவரெலியா மாவட்ட செயலக காரியாலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக நகர் மற்றும் வெளிபுறங்களில் அதன் எல்லை பகுதிகளில் தனியார் குத்தகைகாரர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கான குத்தகை பணம் உரிய வேளையில் வழங்கப்படவில்லை எனவும் இவ்வாறு வழங்கப்படவுள்ள குத்தகை பணத்தினை கால தாமதம் இன்றி வழங்குவதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு அழுத்தம் தெரிவித்தே...
இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர் அளவில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், வடக்கு பகுதியில் இம்மாதம் 5 தொடக்கம் 14ஆம் திகதி வரையில் சூரியன் உச்சமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் ஓப்பனாயக்க,வடக்கு-களுத்துறை,மொலமுர மற்றும் மகாவெல்லத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நண்பகல்...
கிளிநொச்சி முல்லை மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி ஊக்குவிப்பு உதவித்திட்டம் – வடக்கு மீன்பிடி அமைச்சு
Thinappuyal -
வடக்கு நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவர்களுக்கான பெரிய மற்றும் சிறிய ஓடங்கள், நன்னீர் மீன்பிடி மானிய வலைகள், உயிர் காப்பு அங்கிகள் போன்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 05-04-2016 செவ்வாய் மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு...
வத்தளையில் அகற்றப்பட்ட உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணப் பணிகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த வத்தளை உடற்பயிற்சி நடைபாதை அகற்றல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க இருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக பாரிய தொகையொன்று கைமாறி இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்திருந்தனர்.
எனினும் குறித்த சம்பவத்தில் தனக்கு எதுவித தொடர்புகளும் இல்லை என்று மறுத்திருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, கடந்த ஆட்சிக்காலத்தில்...
செல்லக்கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றின் ஏரியிலிருந்து வெட்டுக்காயங்களுடன் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர்கள் யார் என்பது தொடர்பில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும், இந்த சம்பவத்தில் 52 வயது மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண்களே கொல்லப்பட்டுள்ளதாகவும் செல்லக்கதிர்காம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமுர்த்தி முகாமையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்: கட்டாய இடமாற்றம் வழங்கியது திணைக்களம்
Thinappuyal -
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது.
ஏழாலையிலுள்ள சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகப் பெண் ஊழியர்களினால், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறித்த முகாமையாளர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சமுர்த்தி முகாமையாளருக்கு...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு!
Thinappuyal -
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தலைமைத்துவத்திலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் எழுத்துமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்திருந்த போதிலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை, நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக உள்ளக விமான பயணங்களுக்காக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணங்கள் தொடர்பிலும் பணம் செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் புஸ்பா ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
புஸ்பா ராஜபக்ச...