பிரபல சிங்கள ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொழும்பு-07 பிரதேசத்தில் வைத்து பட்டப்பகலில் அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவரினால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு, கிருலப்பனையில் நடைபெற்றிருந்தது. இதில் செய்தி சேகரிப்பதற்காக திவயின பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பௌத்தாலோக மாவத்தையின் ஊடாக அலுவலக வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இதன்போது அதிசொகுசு வாகனமொன்றில் பயணித்த நபர் ஒருவர் திடீரென வாகனத்தை முந்தி, இடைமறித்து...
பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், அடுத்த வாரம் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின்...
மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் விசேட வரப்பிராதங்களை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத் தலைவர்களையும் இழிவுபடுத்த அவமரியாதை செய்ய இடமளிக்கக் கூடாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும்...
சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பாணந்துறை நகர மண்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிக்கையில், குடும்ப ஆட்சி மற்றும் கூட்டு ஆட்சியினால் தோல்வியடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஜே.வி.பி முன்னெடுத்ததனைப் போன்றே சோசலிச நாடு ஒன்றை உருவாக்குவதிலும் பங்களிப்பு வழங்கும். ராஜபக்ச அரசாங்கம் 1000 பில்லியன்...
நல்லிணக்கத்துக்கான வடிவம், உண்மையை கண்டறிதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுக்க நல்லிணக்க பொறிமுறை செயலணி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணி, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறது. பொதுமக்களின் ஆலோசனைகள், தனிப்பட்ட வகையிலோ அல்லது குழுவாகவோ, அமைப்பாகவோ சமர்ப்பிக்கப்படலாம். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த ஆலோசனைகள் அமையலாம். இந்த ஆலோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அவை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். எனவே ஆலோசனைகள் எதிர்வரும் மே முதலாம்...
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழு, யாழ்ப்பாணம் முதல் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மற்றும் மன்னார் பிரதேசங்களில் சுமார் 7ஆயிரம் பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கை பெரும்பாலும் மே அல்லது ஜூனில்...
கொழும்பு போட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், இலங்கையில் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 790 நிபந்தனைகளை குறித்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் குறித்த நிபந்தனைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு நிபந்தனையாக, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 46ஆயிரம் சதுரமீற்றர் கடல் காணிப்பகுதி சர்வதேச நச்சுக்களை கண்காணிக்கும் அமைப்பினால் எந்த நேரத்திலும் கண்காணிக்கப்படும். அத்துடன் குறித்த பிரதேசத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்கள்...
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வசிம் தாஜூடின் கொலை...
உள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்த வேண்டியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள், மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளிலேயே, நாமல் ராஜபக்ச செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரூபா விமானக் கட்டணங்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன. முன்னைய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்காக விமானப்படை விமானங்களை அவர் வாடகைக்கு அமர்த்தியதற்கான கட்டணங்களே செலுத்தப்படாமல்...