முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால்,  மக்கள் பாதுகாப்பை வழங்குவார்கள் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தம் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. மஹிந்த ராஜபக்சää நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவராவார். இவ்வாறான...
நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழீழத்திற்கான் பின்னணி உருவாக்கப்படுகின்றது என தேசிய அமைப்புக்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர் டொக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பிரிவிணைவாதம் தற்போது பிரபாகரனின் முறைக்கு மாறுபட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கம் படையினரை அகற்றுகின்றனர், புலனாய்வுப் பிரிவினரை பலவீனப்படுத்துகின்றனர். இதற்கிடையில் வடக்கிலிருக்கும் சிங்கள மக்கள் இந்தப் பக்கம் வருகின்றனர். நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழீழத்தை அமைக்கும்...
இந்நாட்டு இளைஞர், யுவதிகளின் இருபது ஆண்டுகால இருள் சூழ்ந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒளிபரவும் எதிர்காலத்துக்கான வாசற் கதவு திறக்கப்பட்டிருப்பதாக யொவுன்பர இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். இந்த இளைஞர் மாநாட்டின் பிரதான இலக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் இளைஞர், யுவதிகளை பங்காளர்களாக இணைத்துக் கொள்வதே எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி...
தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் சாட்சியமளிக்க நேரிட்டால் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டி ஏற்படும். அதனால் இந்த சம்பவத்தை தான் மறந்துவிடத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த வாசுதேவ நாணயக்கார எம்பி, சபாநாயகருக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணை குறித்து கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்தபோதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக்...
தனது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எனது பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 100 இராணுவப் படையினரில் 50 பேர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரை அகற்றி பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில்...
  மட்டக்களப்பு மாவட்டத்தல் பெண்கள் கபடி அணியியில் ஒரே ஒரு தமிழ்ப்பெண் இடம் பிடித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி வயது 19 என்ற பெண்மணியே தேசிய கபடி அணிக்கு தெரிவாகியுள்ளார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர் 12 பேர் கொண்ட அணியில் 11 சிங்கள பெண்கள் மத்தியில் ஒரு தமிழ் பெண்மணியாக தெரிவாகியுள்ளார்.  எதிர் வரும் 8 ம் மாதம்...
  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்த விதமான நிதியும் கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே.தேவராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வாடி வீடு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 2009 ஆண்டுக்குப் பின்னர் மனித உரிமைகள் தொடர்பாகவும் காணமல் போனவர்கள் போன்ற விடங்களிலும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள் காணி ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் அத்தனையையும் எம்மீது தாங்கிக்...
பொழுது விடிந்து கண் விழிப்பது முதல் படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள் அன்றாட செலவுகள் போக மீதி பணத்தை சேமித்து வைப்பது என்பது எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்ய கூடிய உதவியாகும். வசதியுள்ளவர்கள் பணத்தை என்ன செய்வது, எங்கு சேர்ந்து வைப்பது, என்னென்ன நகை வாங்குவது என்று யோசிப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய...
லிந்துலை - இராணிவத்தைக்கு செல்லும் இப்பாதை செப்பனிடப்படாமல் இருப்பதனால் மக்கள் பல துயரங்களை அனுபவித்து வருவதாக இப்பகுதி மக்கள் அங்கலாகின்றனர். இவ்வீதி சேதமடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் வீதியில் நடந்து செல்வதில் கடும் அசௌகரியங்களுக்கு உட்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வீதியின் ஒரு பகுதி கொங்கீறிட் இடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதியே புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக உள்ளதாத...
இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா விமான நிலையத்தில் பயணிகள் விமானங்கள் மோதியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.ஜகார்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்தே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹலிம் பெரடன குசுமா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் பட்டிக் எயார் போயிங் 737 என்ற விமானத்திற்கும் ஏடிஆர் 72 விமானத்திற்கும் இடையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக விமானத்தின் இறக்கை பகுதியில் நெருப்பு பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட...