நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாபானபிரேமசிறி மகாநாயக்க தேரரை சந்தித்தப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மகிழடித்தீவிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு செல்லும் பிரதான வீதியில் மீனாட்சிமரத்தடியில் இன்று துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்த இருவரும் காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார்...
பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயது நிரம்பிய திருமணமான இளைஞன் 04.04.2016 அன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டவராவார். அம்மாணவி, ஆபத்தான நிலையில் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற, மேற்படி சம்பவம் குறித்த புகாரையடுத்து,...
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட யாழ்ப்பாண சதுரங்க வலயமட்டப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு லோஜினி முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் பசுபதிப்பிள்ளை கார்த்திகா ஐந்தாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இலங்கை சதுரங்க சம்மேளனமானது இலங்கையை ஐந்து சதுரங்க வலயங்களாகப் பிரித்து இப்போட்டியை நடத்தியது. கொழும்பு , கண்டி, யாழ்ப்பாணம் , காலி, குருநாகல், என்பனவே அவ் ஐந்து சதுரங்க வலயங்களாகும். யாழ்ப்பாண சதுரங்க வலயத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஐந்து...
எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 09 நாட்களுக்கு நாட்டின் வடக்கு உட்பட சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என்பதால் மக்கள் தமது உடல்நிலை தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேகநபரை இந்த மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவியின் கொலை தொடர்பில் கைதான அயல்வீட்டு குடும்பஸ்தருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு மாதம் கடந்த நிலையிலும் மாணவியின் மரணம் தொடர்பான டிஎன்ஏ,...
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் மதரசா வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் அமைந்துள்ள குழாய்க் கிணற்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக இளம் நீல நிறத்தில் நீர் வெளிவருகின்றது. இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதாரப் பணிமனையில் நீரின் மாதிரியை ஒப்படைத்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரின் மாதிரி பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு அக்குழாய்க்கிணற்று நீரை அருந்த வேண்டாமெனவும் அவ்வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேற்படி பணிமனையின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.றைஸ் தெரிவித்தார்.
இந்த நாட்டு மக்கள் சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டியதாகவுள்ள பாரிய கடன் தொகைக்கு கடந்த மகிந்த அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டுமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்.மரிக்கார் தெரிவிக்கின்றார். நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக கொக்கரிக்கும் மகிந்த அணியினர் இதற்கு யார் காரணமென்பதை சிந்திக்க வேண்டும். தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கமா அல்லது முன்னைய மகிந்த அரசாங்கமா நாட்டை படுகுழியில் தள்ளியதென்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை...
  காலை தேனீர் தர மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது. இன்று காலை கணவன் மனைவியிடம் தேனீர் கேட்க அதை மறுத்த மனைவியுடன் நடந்த வாக்கு வாதத்தின் உச்சத்தில் கணவன் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார் . இச்சம்பவத்தின் போது காயமடைந்த மனைவியை வைத்தியச்சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரு குழந்தைகளின் தாயே கணவரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், குடிபோதையில் தினமும் குறித்த பெண்ணை மீரட்டுவதையும்...
கிளிநொச்சி பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, கிராம சேவையாளர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளனர்.அதன்படி குறித்த பகுதியில் மது அருந்தப்பட்ட தடயங்கள் மற்றும் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன்,...