பிளாக்பெரி நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு எப்பவுமே தனி மவுசு காணப்படுவது அனைவரும் அறிந்ததே.அதில் உள்ள பாதுகாப்பு வசதியே இதற்கு முதன்மை காரணமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் BlackBerry Priv எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. எனினும் நான்காவது காலாண்டுப் பகுதியில் மட்டும் சுமார் 600,000 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிளாக்பெரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 700,000 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனை...
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது.அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல்...
நாட்டில் நிலவிவரும் கடும் வரட்சியான காலநிலையால் மலையகத்தில் உள்ள  பல நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதோடு, தியலும நீர்வீழ்ச்சியில் நீரின் அளவு குறையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே போல் பதுளை மாவட்டத்திலும் நிலவி வரும் வரட்சியான காலநிலையால் கொஸ்லந்தை பிரதேசம் உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே 628 அடி உயரமான, இலங்கையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான தியலும நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. கொஸ்லந்தை உட்பட பல பிரதேசங்களில் நீர்...
இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அடங்கியுள்ள சத்துக்கள் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக...
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றய தினம் இரவு நெடுந்தீவு கடற்பகு தியில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த மீனவர்கள் தமிழ்நாடு இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ஒரு படகையும் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பதிவுகளை மேற்கொண்டதையடுத்து யாழ் மாவட்ட கடற்தொழில்...
மன்னார் திருக்கேதீஸ்வரம் அருகே இன்னொரு கூட்டுப் புதைகுழியைத் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரம் கூட்டுப் புதைகுழி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுத் தோண்டப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்து 96 நபர்களுடையது என்று சந்தேகிக்கப்படும் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கூட்டுப் புதைகுழி அருகே இருக்கும் இன்னொரு பாழடைந்த கிணற்றிலும் மனித எலும்புக் கூடுகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் உத்தரவின் பேரில் குறித்த பாழடைந்த கிணறு இம்மாதம்...
முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  தொடங்கொட, போம்புவல பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீதே நேற்று இரவு 11.30 அளவில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பாதையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும் இதனை கவனத்தில் கொள்ளாமல் முச்சக்கரவண்டி சென்றுள்ளதால் பொலிஸார் இதனை மோட்டார்வண்டியில் பின் தொடர்ந்து சென்று குறித்த முச்சக்கர...
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவுப் பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி, கல்வி ஆர்வலா்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. இந்த நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது. குறித்த பாடசாலையின் பொது அறிவுப் பரீட்சைக்கான கேள்வித்தாளில் “பசங்க”...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். அதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி உள்ளூராட்சித் தேர்தல்கள் மாதக்கணக்கில் பிற்போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு வேறு பல காரணங்களும் முன்வைக்கப்படுகின்றது. தேர்தல் தொகுதி...
முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. பாதுகாப்பில் இருந்த 89 பேரைக் கொண்ட இந்த அணியையே இந்தப்  பணியில் இருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்த காலத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ கொமாண்டோக்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கேணல் மகேந்திர பெர்னான்டோ, இந்த இராணுவ அணிக்குப் பொறுப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.