யாழ்,கொடிகாமம் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட 95 கிலோகிராம் கேரள கஞ்சாவை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள போதைப்பொருள் ஒழிப்புப் பணியக உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பின்னரே யாழ்.கொடிகாமம் பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கஞ்சா மீட்பின் போது தப்பியோடிய சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக...
சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் தர்மசேனவின் முறைப்பாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் இந்துனில் என்பவர் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் அருணி ஆட்டிகல முன்பாக சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பான மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவில் சாவகச்சேரியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அங்கி, காந்தக் குண்டுகள், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள், சிலிக்கன்...
விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருந்த நிலையில், அவரை நாடு கடத்தியமைக்கு எதிராக ஜப்பான் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஜப்பானின் சட்டத்தரணிகள் சங்க வலையமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று அந்தநாட்டின் நீதியமைச்சரிடம் ஆட்சேபனை கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. இந்த செயற்பாடு, ஜப்பானிய குடிவரவுத்திணைக்களத்தின் ஆளுமையற்ற செயற்பாடு என்றும் சட்டத்தரணிகள் வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் பல்வேறு தடவைகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக...
யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலமபெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தற்கொலை அங்கி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி வலையமைப்பு, வங்கிக் கணக்குகளை மையப்படுத்திய விஷேட விசாரணைகளிலேயே இத்தகைய சந்தேகிக்கத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி...
விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism) ஞாயிறன்று (3) இந்த தகவல்களை “பனாமா பேப்பர்ஸ்” எனும்...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் ஒன்று 04.03.2016 அன்று மாலை மீட்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 70வயது மதிக்கதக்க இரண்டு பிள்ளைகனின் தந்தையான பழனியாண்டி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் தொடர்பாக அட்டன் நீதவான் விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக நோர்வூட் பொலிஸார்...
உடப்புசலாவ கோட்லோஜ் தோட்டத்தில்    புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா 03.04.1016 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேற்படி வேலைத்திட்டம் முன்னொடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே இராதாகிருஸ்னன்  மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ஆர் ராஜாராம் சரஸ்வதி சிவகுரு ட்ரஸ்ட் நிறுவன தலைவர் புத்திரசிகாமனி ஆகியோர் அடிக்கல் நாட்டுவதையும் கலந்துகொண்டவர்களையும் படத்தில்...
இரட்டை போபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும்...
சீனாவின் புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் யூலின் நாய் இறைச்சி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது 10 முதல் 15 ஆயிரம் நாய்கள் வரை இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. தற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பழக்கத்தை கைவிட முடியாது என்றும் ஆண்டுக்கு ஒரு...
பணத்தை பதுக்கி வைத்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஸ்லாந்து பிரதமரின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை 'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. அதில், உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி...