தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி ஹாலிவுட் படம் வரை நடிக்க ரெடியாகிவிட்டார். இந்நிலையில் இவரின் நடிப்பிற்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் புதிதாக இணைந்திருப்பவர் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஷீனா சோஹன். இவர் கூறுகையில் ‘தனுஷின் நடிப்பு தனித்துவமானது. அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இவர் மலையாளம், ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம்சச்சின். இப்படம் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் என்றே கூட கூறலாம். ஏனெனில் இந்த படத்தில் விஜய்யை பிடிக்காதவர் யாரும் இல்லை, அந்த அளவிற்கு தன் துறுதுறு நடிப்பில் அசத்தியிருப்பார். அதிலும் இவருக்கும் ஜெனிலியாவிற்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்திற்கும் தெறி படத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது. சச்சின் படமும் ஏப்ரல் 14ம் தேதி தான்...
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்தில் இரு முன்னணி நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவது உண்டு. அந்த வகையில் இன்றைய சினிமாவில் சண்டைக்காரர்களாக சிம்பு-தனுஷ் சமீபத்தில் நட்பாக பழகி வருவது அனைவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து துருக்கி நாட்டுக்கு செல்லவிருக்கின்றனர். அதற்கு காரணம் கௌதம் மேனன் தான். இவர் தற்போது தனுஷை வைத்து இயக்கி வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா, அதே வேளையில் சிம்புவை வைத்து...
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை பார்த்து உற்சாகமடைத்த அஜித் ரசிகர்கள்#TamilNewYearWithThala57 என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். தலயின் வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்...
வெள்ளித்திரைக்கு நிகராக ரசிகர்கள் இருப்பது சின்னத்திரைக்கு தான். சீரியல்கள் என்றாலே பெரும்பாலும் மாமியார் மருமகள் சண்டை என்பது மாறி காதல் சாட்சிகள் எல்லாம் வரத்தொடங்கி விட்டன. அந்த வகையில் தொகுப்பாளினி ப்ரியாவால் இளைஞர்களும் பார்க்கும் சீரியல் என்றால் அது கல்யாணம் முதல் காதல்வரை தான். இதில் திருமணம் ஆனாலும் நாயகன் அர்ஜுனும், நாயகி ப்ரியாவும் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பர். அவ்வப்போது ரொமான்ஸ் செய்வர். அடுத்த நொடியே சண்டை போடுவர். கடந்த சில...
இப்போது நடிகர் சங்க துணை தலைவராக இருக்கும் நடிகர் கருணாஸ், வரும் மே மாதம் நடக்கும் தமிழக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளார். நேற்று தான் ஆளும் கட்சியான ஆதிமுக'விற்கு தன் ஆதரவை தெரிவித்து கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்குலத்தோர் புலிப்படை என்ற இயக்கத்தை நிறுவனரான கருணாஸ், ராமநாதபுரம் திருவாடானை தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சிவகார்த்திகேயன் அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. மேலும், நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க ரூ 2 கோடி வரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். 15 பயன்கள் 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். 3. வயிற்றுப் புண் குணமாகும். 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும். 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். 8....
ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்தி;ற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார். பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருந்த நிலையில், அவரை நாடு கடத்தியமைக்கு எதிராக ஜப்பான் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஜப்பானின் சட்டத்தரணிகள் சங்க வலையமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று அந்தநாட்டின் நீதியமைச்சரிடம் ஆட்சேபனை கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. இந்த செயற்பாடு, ஜப்பானிய குடிவரவுத்திணைக்களத்தின் ஆளுமையற்ற செயற்பாடு என்றும் சட்டத்தரணிகள் வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் பல்வேறு தடவைகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக...