இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது.
ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது
இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது
இதன்படி இந்தியாவில் மாத்திரம் 100 கிளைகளை நிறுவ...
வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! ஆளுநரின் முயற்சியினால் மீண்டும் இயங்க அனுமதி
Thinappuyal -
ஆளுநர் மற்றும் அரச அதிபரின் முயற்சியினால் வடமராட்சியில் பூட்டப்பட்ட மதுபானச்சாலையினை சட்டத்தின் பிரகாரம் தற்காலிகமாக இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பல்லாயிரக் கணக்கான வெடிகள் கொளுத்தி மிகப் பெரும் ஆராரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பிரதான சிவன் ஆலயம் ஒன்றிற்கு மிக அருகிலும் மற்றும் வேறு சில காரணங்கள் தொடர்பிலும் முன்னாள் ஆளுநர் , மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு பிரதேச மக்களால் முறையிடப்பட்டிருந்தது.
இது குறித்து...
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது
Thinappuyal News -
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்தில் இயங்கும் ஆண்கள் பாதுகாப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கைது செய்யப்பட்ட பெண்கள் அந்நாட்டு குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இலங்கை பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது...
முக்கிய பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று முற்பகல் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தின் போது கட்சியில் தற்போது காணப்படும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்ப்பட உள்ளதாக கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2005ம் ஆண்டின் பின்னர் கட்சியில் உருவாக்கப்பட்ட சில புதிய பதவிகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் இதற்கு...
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
சிறைச்சாலை திணைக்களத்தின் சாதாரண நடைமுறைக்கு புறம்பான வகையில் குமார் குணரட்னம் கேகாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை.
குமார் குணரட்னம் கேகாலையிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதற்கு போதிய தெளிவான...
கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடாபில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சோபித தேரரின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்படாமைக்கான காரணத்தை விளக்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவிற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக தேரரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...
எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றன. தற்செயலாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் வெடிபொருட்ளை மீட்கின்றனர்.
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உண்டு. அரசாங்கம் தனது குறைகளை மூடி மறைக்க எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்துகின்றது.
இந்த வெடிபொருட்கள் தொடர்பிலான...
இலங்கையில் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் முறையாக அரசியலமைப்பு சபையாக கூடுகிறது
இதன் போது அரசியலமைப்பு சபைக்காக 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாக இருப்பதாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் திருமதி ரோஹனதீர தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது.
வாய்மூல விடைக்கான கேள்வி பதிலை தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.
பிற்பகல்...
கடந்த வருடம் ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான தனது முதலாவது விஜயத்தை நாளை மேற்கொள்கின்றார்.
ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான முதலாவது விஜயத்தை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாகவே பிரதமரின் நாளைய பயணம் அமைந்திருக்கிறது.
இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் சீனாவுடன் கொண்டிருக்கும் நட்புறவை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கத் தவறுவதில்லை. அதேசமயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவானது இந்தியாவிலிருந்து மேற்குலகம்...
நாய்க்குட்டடிக்கு அன்போடு பாலுட்டும் ஒரு பாசமுள்ள தாய் மனதை நெகிளவைக்கும் காட்ச்சி
Thinappuyal News -
நாய்க்குட்டடிக்கு அன்போடு பாலுட்டும் ஒரு பாசமுள்ள தாய் மனதை நெகிளவைக்கும் காட்ச்சி