ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வடக்கில் தற்கொலை குண்டு அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் இரண்டு இடங்களில் மீட்ப்பட்டிருந்ததன. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளை அதிகரிக்க பாதுகாப்புத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர். முப்படையினர், புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர். விரிவான அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இரவு நேர ரோந்துப் பணிகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும்...
இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர். இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது. குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் நாலாயிரம் வீடுகள் கட்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்பிட்டி, பாலகுடாவ பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்த திருடன் தேவாலயத்தின் உண்டியலை திருட முற்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான நபர் சனிக்கிழமையன்று தேவாலயத்தை திறந்தபோது அங்குள்ள யேசுநாதர் சிலைக்கு கீழ் மரணமான நிலையில் மீட்கப்பட்டார். இதன்போது, அவரால் திருடப்பட்ட உண்டியல் பணமும் சிதறிக்காணப்பட்டது. இந்தநிலையில், மரணம் சம்பவித்தமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  
வத்தளை மாபொல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான்...
நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினால் மன்னார் மாவட்டத்தில் 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,120 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ளவர்கள் குடிநீர் இல்லாமல் பாரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினம் 2 மணிக்குப்...
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை உத்தியோகத்தர்கள் கடமைக்காக தனியார் பேருந்தில் இருந்து வரும் போது ஏறாவூர் போக்குவரத்து சபைக்கு சொந்தமான கல்முனை தொடக்கம் திருகோணமலை செல்லும் பஸ் இவர்களது பேருந்தை வழி மறித்துள்ளது. அத்தோடு பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பிரதேச செயலக ஊழியர்களை...
மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டியெருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி, பதுளை வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய சந்தனம் தங்கராசா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். தனது வீட்டிலிருந்து கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மூதாட்டியை செங்கலடியிலிருந்து பதுளை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதித் தப்பிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரித்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிந்த மூதாட்டியின் சடலம், பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச...
தேசத்தின் எதிர்காலத்திற்காக பிள்ளைகளுக்கு புதிய உலகத்தைத் திறந்து கொடுப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும் இளைஞர்கள் தொழிநுட்பத்தின் அடிமைகளாக அல்லாது உருவாக்கத்திறன் கொண்டவர்களாக இருப்பதன் மூலமே தங்களது கனவுகளை வெற்றிகொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். இணையப் பாவனையின் மூலம் உலகம் சுருங்கியுள்ள போதிலும் இளைஞர்கள் தொழிநுட்பத்திற்கு அடிமைப்பட்டுப் போவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.. நேற்று முன்தினம் (02) சீகிரிய விமானப்படை முகாமில் நடைபெற்ற ‘யொவுன் புரய 2016’...
யாழ்.கொடிகாமம் உசன் பகுதியில் கொழும்பு கொண்டு செல்லப்படுவதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த 96 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார். நேற்றய தினம் மேற்படி கஞ்சா யாழ்ப்பாணம் ஊடாக கொழுப்புக்கு கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வந்து மேற்படி போதைப் பொருட்களை மீட்டுள்ளனர். இரவு 11 மணிக்கு மேற்படி போதைப் பொருளை...
வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 8பேரில் 6 பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு மீதான விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ்,...