சிவாஜிலிங்கத்தை விசாரணை செய்யக்கூடிய முதுகெலும்பு அரசாங்கத்திற்கு கிடையாது -பிரசன்ன ரணதுங்க
Thinappuyal -0
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவன்கொடையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறிய போது, நாம் அனைவருடனும் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம். எனினும் அரசாங்கத்தின் எல்லா செயற்பாடுகளுக்கும் எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது....
புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்தும். ஏனைய கட்சிகளை விட கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளே மிகவும் முக்கியமானவை என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பிரதமரை விமர்சித்துள்ளமை மற்றும் புதிய அரசியலமைப்பின் அரசியல் தீர்வு உள்ளடக்கப்படவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச இந்த விடயம்...
100 கோடி ரூபா ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையின் தென் கடற்பகுதியில் வைத்து 101 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 ஈரான் பிரஜைகளும் ஒரு பாகிஸ்தான் பிரஜையும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க...
புதிய அரசியலமைப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஜே.வி.பி கட்சியும் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களை அறிந்துகொள்ள நேரத்தை ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரையில் கவனத்திற் எடுத்துக்கொள்ளப்படவில்லை என புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களின் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் முக்கிய பங்களிப்பினை வழங்குவதாக கூறும் இளைஞர்களுக்கு முக்கியத்தும் அளிப்பதாக கூறும் ஜே.வி.பி.யின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புதாக குறித்த குழுவின் தலைவர் சட்டத்தரணி...
ஜே.வி.பி.யின் உயிரிழந்த போராளிகளுக்கான அஞ்சலி நாளை மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
1971ம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் ஏப்ரல் போராளிகள் தினத்தை ஜே.வி.பி. ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றது.
இதுவரை காலமும் கொழும்பில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நினைவுதின வைபவங்கள் இம்முறை மாத்தறை, அநுராதபுரம் நகரங்களிலும் கொழும்பிலும் நடத்தப்பட உள்ளது. அத்துடன் மாவட்ட மட்டத்திலும் நினைவு தின வைபவங்கள் நடத்தப்படவுள்ளன.
கொழும்பில் நடத்தப்படும் வைபவத்தில் அனுரகுமார திசாநாயக்கவும், மாத்தறையில்...
யால தேசிய வனத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய வனத்தில் உள்ள மிருகங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமித் பிலபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வாரம் பாடசாலை விடுமுறை என்பதால் அதிகமானோர் இங்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சபாரி வாகனத்தின் சாரதிகள் சங்கத்தினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர்...
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்காண்பதற்கு CCTV கெமராக்களை பொருத்த உள்ளதாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நகரில் 128 CCTV கெமராக்களை பொருத்தவுள்ளதாகவும், அத்தோடு கெமரா பொருத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் இதற்காக ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டு சட்டத்தின் பிரகாரம் பகிரங்க ஆவணங்கள் மூலம் வாகனங்களை கொள்ளவனவு செய்ய முடியாது அத்தோடு வாகனங்களை...
குளியாப்பிட்டிய-ஹெட்டிபொல பிரதான வீதியின் மலகனே சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.
பாதையில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளின் மீது மோட்டார் வண்டி ஒன்று மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனும், மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவிலுக்கு அருகில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பூர் பிரதேசமானது கடந்த 9 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, கடந்த 25 ஆம் திகதியே பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக வந்தவர்கள் நேற்றைய தினம் குறித்த...
சம்மாந்துறை மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ.இ.ம.காங்கிஸின் பிரதித்தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் அவர்களின் தலைமையில் நேற்று இரவு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி...