ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் இழுத்தடிப்பு இடம்பெறுவதாகவும் இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஊடக அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக பிராந்திய ஊடகவியலாளர்கள் உட்பட அலுவலக ஊடகவியலாளர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில் நேர்முகப்பரீட்சைகளில் கலந்து கொண்டதன் பிரகாரம் சில ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்...
ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே...
புத்தாண்டுக்கு பொருள் கொள்வனவிற்காக தலைநகரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்ய தலைநகருக்கு வரும் பொதுமக்கள் தமது தங்கநகைகள்,பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் பணப்பைகளை திருடர்களிடம் பறிகொடுப்பதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புறக்கோட்டை, மஹரகம, நுகேகொடை உள்ளிட்ட பிரபலமான நகரங்களுக்கு வரும் பொதுமக்களே பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் பறி கொடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருடர்கள்...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகத் தொழிலுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி நாடு திரும்பும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அதேவேளை பணிப்பெண்கள் சிலர் அங்கு மரணமடைந்து உயிரற்ற உடலாக நாடு திரும்பும் வேதனைக்குரிய முடிவும் ஏற்படுகிறது. இலங்கையிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண் வேலைக்கென சவூதிக்குச் சென்ற பெண்ணொருவர் அங்கேயே மரணமடைந்துள்ளார். அப்பெண்ணின் சடலம் கடந்த வாரம் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இலங்கையிலிருந்து செல்கின்ற வீட்டுப்...
அண்மையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான எட்வட் ஜூலியன் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் கணக்கிற்கு...
பிரபாகரனின் நாமம் மீண்டும் தென்னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, அது எதனால்? அவர் பற்றி தென்னிலங்கையில் கூறப்படுவது என்ன? புலிகளின் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமா? இந்திய ரோ அதிகாரிகள் புடவை வியாபாரிகள் வடிவத்தில் வடக்கு கிக்கில் எதற்காக? நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா? புலிகள் வருகிறார்கள் எனக் கூறுவது நிஜமா? மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா? இலங்கையுடன் சீனாவின் உறவு ஏன் அதிகரிக்கப்பட்டுள்ளது? எனும் வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற்...
  கையடக்கத் தொலைபேசிகளில் ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போது மக்களிடையே அதிக ஆர்வம் நிலவியுள்ளது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
  தனது மகளின் கொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத் தாருங்கள் என வித்தியாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதே வித்தியாவின் தாயார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார். யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார். இதன்போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி...
  வவுனியாவில் நல்லிணக்க கிராமம் எனும் பெயரில் இராணுவக் குடியேற்றம் இன்று இராணுவத்தினரிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் கையளிக்கப்பட்டது. இதில் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கும் வீடுகள் வழங்கப்பட்டது. வவுனியா, கொக்குவெளிப் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக பாதுகாப்பு அமைச்சினால் சத்விரு சங்ஹிந்த என்னும் பெயரில் அமைக்கப்பட்ட வீடுகளே இன்று கையளிக்கப்பட்டன. முதற்கட்டமாக இதில் 51 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 6 வீடுகள் இராணுவத்தில் இணைந்த...
  வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி. அக்கா வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரியில் பயின்று வரும் நிலையில் அண்ணன் மின் இலத்­தி­ர­னியல் கார் திருத்­து­ன­ராக கட­மை­யாற்­று­பவர். புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரத்தில் கல்வி பயின்று வந்த வித்­தியா கெட்­டிக்­காரி. கல்வி நட­வ­டிக்­கை­களில் மட்­டு­மல்­லாது புறக்கிருத்திய செயற்­பா­டு­க­ளிலும் அவ­ளது...