தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது, இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய...
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்...
(சுமன்) கிழக்கு ஆளுநர் தொடர்பில் அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். பொத்துவில் கனகர் கிராமம் தொடர்பில் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். அது அங்கிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்களுக்குரிய காணி அந்த மக்களுக்கே அந்தக் காணிகள் வழங்கப்படும் என்பதில் நானும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக்...
நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து...
  "ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்..." இப்படி நாங்கள் பலரைப் பார்த்துச் சொல்வதுண்டு. செல்வந்தர்களாக இருக்கட்டும், கல்விமான்களாக இருக்கட்டும், அரசியல்வாதிகளாக இருக்கட்டும் இப்படி பலருக்கு இந்த வார்த்தை ஏக பொருத்தமாய் அமையும். அப்படி ஒருவர் தான், சமகால இலங்கை அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி..(Maithripala Sirisena) செயல் வீரன் மைத்திரி அநேகமாக, தேர்தல்கள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த மக்கள்...
  பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மலையகத்தை பொறுத்தமட்டில் பல இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக காணப்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். வெற்றிடங்கள் மலையக பொலிஸ் நிலையங்களிலேயே அதிக அளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. எனவே, தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு...
  அநுரகுமார திசாநாயக்க (Anura kumara dissanayaka) யாழ்ப்பாணம் (Jaffna) வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தால், அநுரகுமாரவின் (Anura kumara dissanayaka) வருகை தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) பாடசாலைகளின் மதில்களில், வாசல்களில் ஒட்டப்பட்டுள்ளன. கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு இவ்வாறான சுவரொட்டிகள் பாடசாலை மதில்களில் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
  தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற நிலையில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுற்றுலா பயணம் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாடு செல்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர். சாகசம், கலாசார மூழ்குதல் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை பெண்கள் அதிகம் தேடுவதாக குறித்த சஞ்கிகை தெரிவித்துள்ளது. சிறந்த தேர்வு “பல நாடுகள் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு...
  60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாயையில் வாழ்கின்றனர் "சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வதந்திகள் பொய்யானவை, அந்த...