ஜெயம் ரவி நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் மிருதன். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், இதனால் இப்படத்திற்கு எந்த இடத்திலும் வசூல் குறையவில்லை, படம் வெளியான 3 நாட்களில் ரூ 20 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் ஜெயம் ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இப்படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வராத விண்வெளியை பின்புலமாக கொண்டதாம்....
இந்த வருடம் அட்டனில் நடைபெறவுள்ள சித்திரை புத்தாண்டை தேசிய விழாவாக கொண்டாட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் இடம்பெறவுள்ள இந்த புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், தமது விண்ணப்பங்களை வைத்தியசான்றிதலுடன், விளையாட்டுத்துறை அதிகாரி, பிரதேச செயலாளர் காரியாலயம் அம்பகமுவ என்ற முகவரிக்கு எதிர்வரும் 8ஆம் திகதி...
விவசாயிகள் நாட்டுக்கு சோற்றை வழங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க எடுக்கும் முயற்சிகளை எந்த சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரசாயன பசளை பயன்படுத்துவதால், இழக்கப்படும் விவசாயிகளின் உயிர்களை பாதுப்பதற்காக இயற்கை கனிம பசளையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.பொலன்நறுவை கல் விகாரை சூழலில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.ஆரம்ப காலத்தில் இயற்கை பசளைகளை பயன்படுத்தியே விவசாயிகள்...
மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள 15 பேரும் 'மேட்ச் வின்னர்கள்' தான் என்று அந்த அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள அதிரடி வீரர் கெய்லை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விரைவில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்து வந்த சார்லஸ், சிம்மன்ஸ், ரஸல் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2வது...
டி20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதியில் இந்தியாவை புரட்டியெடுத்தது பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் சிம்மன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் சிம்மன்ஸ் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் மும்பை மைதானத்தில் அதிரடி காட்ட ஐபிஎல் போட்டியே தனக்கு உதவியதாக சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 82 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது...
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இதில் முதலில் களமிறங்கிய இந்தியா 2 விக்கெட் மட்டும் இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கோஹ்லி (89) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது...
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியை கிண்டலடித்து டுவிட் போட்டுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோற்றது.
இந்திய அணியின் இந்த தோல்வியால் வங்கதேசம், பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கதேச வீரர் முஸ்பிகர் ரஹீம் டுவிட்டரில் வெளிப்படையாகவே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானில்...
சுழற்பந்து வீச்சாளர்கள் ’நோ- பால்’ வீசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.உலகக்கிண்ண டி20 தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய ‘நோ- பால்கள்’ அணிக்கு தோல்வியைத் தேடித் தந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சிம்மன்ஸ் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் வீசிய பந்தில் பும்ராவிடம் பிடி கொடுத்தார். ஆனால் அது ’நோ-பால்’ என அறிவிக்கப்பட்டது.
பிறகு வேகப்பந்து...
ஏனைய நிறுவனங்களைப் போன்றே ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும் விற்பனைக்கு பிந்திய சேவையினை பயனர்களுக்காக போட்டி போட்டு வழங்கிக்கொண்டிருக்கின்றன.இவ்வாறு தனது வடிவமைப்பிலான கைப்பேசிகளுக்கு பயனர் சேவையை வழங்குதவற்கு சம்சுங் நிறுவனம் Samsung+ எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளிவரவுள்ள நிலையில் தொலைவிலருந்தான வாடிக்கையாளர் சேவை (Remote Customer Support) வசதியினை உள்ளடக்கியதாக வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் கைப்பேசிகளில் ஏற்படும் கோளாறுகளை சம்சுங் நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷன்...
குழந்தை பிறந்த பின் காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும்.ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய்.
மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு...