கனடாவில் சீக்கிய நபர் ஒருவரை இனவெறி கொண்டல் கும்பல் ஒன்று தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் Quebec மாகாணத்தை சேர்ந்த Supninder Singh Khehra என்பவர் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக வாகனத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, கார் ஒன்றில் வந்த கும்பல், இவரை அணுகி பிரெஞ்சு மொழியில் கத்தியுள்ளனர், மேலும் இவரை முறைத்து பார்த்ததுடன், அவர்கள் குறிப்பாக இவரின் தலையில் இருந்த தலைப்பாகையை குறிவைத்துள்ளனர்.
முதலில் இவரது கன்னத்தில்...
ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நபர் ஒருவர் தனது டிராக்டர் மூலம் மோதியது 2016 ஆம் ஆண்டில் மிக வெட்கக்கேடான குற்றமாக கருதப்படுகிறது.
பவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் சிவப்பு நிற டிராக்டர் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.
முதலில் காவல் நிலையத்தை நோக்கி வந்து மோதிய பின்னர், டிராக்டரை பின்னோக்கி எடுத்த அவர், மீண்டும் காவல் நிலையத்தில் மோதியுள்ளார், ஆனால்...
பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி சலா அப்தே சிலாமை, வழக்கை சந்திப்பதற்காக பிரான்சுக்கு நாடு கடத்துவதற்கு பெல்ஜியம் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன.
130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே சிலாம் (26) என்பவன், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, கடந்த...
வெளிநாட்டு கொள்கைகள் குறித்து டொனால்டு டிரம்புக்கு எதுவுமே தெரியவில்லை என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விரும்பும் டொனால்டு டிரம்ப் வெளியுறவு கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒபாமா, அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
அமெரிக்க...
அம்பாறை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வரகாபொலயில் நோயாளி தற்கொலை
கேகாலை - வரகாபொல ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயதுடைய நோயாளி ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியசாலை...
கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற மக்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 31ம் திகதி காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர், செல்வாநகர் , புதுமுறிப்பு, கிருஸ்ணபுரம் ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற 667 பயனாளிகளுக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு, கரைச்சிப்பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்து பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், இலக்கம் 173/2 மிஹிந்து மாவத்தை, தெஹிவளை என்ற விலாசத்தில் உள்ள 5 மாடியுடன் கூடிய ஆடம்பர வீடும் இரண்டு மாடிகளை கொண்ட மற்றுமொரு வீடும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக காணியை கொள்வனவு செய்ய...
அனைத்து பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வுகாண முடியாது எனவும் அரசாங்கம் எந்த பிரச்சினையையும் ஒதுக்கிவிட்டு செல்லாது எனவும் பிரதியமச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில் நேற்று சதோச அங்காடியை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் இருக்கும் எந்த பிரச்சினையையும் தற்போதைய அரசாங்கம் கைவிட்டு செல்லாது. அதேபோல் பிரச்சினைகளை ஒரே இரவில் தீர்க்கவும் முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
20 வருடங்களாக...
இலங்கையின் சமகால அரசியல் களத்தில் மைத்திரி - மஹிந்த அணிக்கிடையிலான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், அது இன்னொரு ஆட்சி மாற்றத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் தனித்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரியால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சாதகமான...
கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் செய்திக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை- பிரதி அமைச்சர் அமீர் அலி
Thinappuyal News -
கடந்த 31/03/2016 ஆம் திகதி சுடர்ஒளிப்பத்திரிகையில் எனது பெயரிலே அறிக்கை ஒன்று விடப்பட்டிருந்தது. அந்த செய்தியானது கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் 29/03/2016 ஆம் திகதியிலான பத்திரிகை செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
அந்தச்செய்திக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும்,யாரோ சில விசமிகள் இதனை திட்டமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி பிரச்சினையை பூதாகரமாக்க முனைவதை இதன் மூலம் என்னால் உணரமுடிகிறது.
நான் கடந்த 27/03/2016 அன்றிலிருந்து 31/03/2016 வரையான...