டிஜிட்டல் டீவி காட்சிப் பலகையொன்று தலையில் வீழ்ந்து படுகாயத்துக்குள்ளான நிலையில் யுவதியொருவர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிரிய பிரதேசத்தில் நடைபெறும் இளைஞர்களின் களியாட்ட நிகழ்வான யொவுன்புர கொண்டாட்டங்களில் நாடெங்கிலும் இருந்து ஏராளமான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் இசை மற்றும் தகவல்தேடல் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் யொவுன்புர களியாட்ட மைதானத்தில் டிஜிட்டல் டீவி பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரக்காப்பொலை பிரதேசத்தில் இருந்து யொவுன்புர கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 20...
அரச புலனாய்வு சேவைகளை வலுவிழக்க செய்யாது, சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை...
  “உஸாமாபின் லேடனின் அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார். இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆஃபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி...
ஆனமடு - திவுல்வெவ பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகளுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 64 வயதுடைய முதியவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த துப்பாக்கிகள் இலங்கையில் தாயாரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விவசாய வேலையின் போது விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே குறித்த துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக முதியவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம்...
பிபிலை - உனகொல்லை பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 16 பேரும் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அநுராதபுரம் - ஹொரவபொதானை, மருதன்மடம் பகுதியில் டெக்டர் வாகனத்திற்கு அடியில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் கப்புகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும், வாகனத்தில் இருந்து தவறுதலாக விழுந்ததினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையும், டெக்டர் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவபொதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தென் பகுதி கடலில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் தொகை, தெற்கு அதிவேக வீதி வழியாக கொழும்புக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஹெரோயின் தொகையுடன் கடந்த 30 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. மிகப் பெரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள்...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை உரியவரிடம் வழங்குவதற்காக 500 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் இந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நீதவானிடம் இருந்து கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் திடீரென இலங்கை வந்த இவர், இன்று காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்புச்...
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமது பெயரில் உள்ள ஈழம், விடுதலை ஆகிய பெயர்களை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றுள்ள இந்தக் கட்சியின் பெயர், தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து வருகிறது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், கனடா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து. ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற...