சீனாவில் ஹற்பின் பகுதியை தாக்கிய புயல் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கூரையை பெயர்த்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹற்பின் நகரை தாக்கிய கடும் புயல் அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மிகம் மோசமான வானிலை காரணமாக நகரின் பெருவாரியான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி காணப்படுகிறது.
இதனிடையே காற்றின் வேகம் காரணமாக குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கூரை ஒன்று பெயர்த்து வீசப்பட்டுள்ளது.
குடியிருப்பு...
ஐ.நா. மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் எதையும் பின்பற்றாமல், வடகொரிய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அழிப்போம் என்று வடகொரிய அதிபர் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதற்கேற்ப கடந்த ஜனவரி 6-ம் திகதி வடகொரியா 4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலை யில், வடகொரியா நேற்று சான் டோக் பகுதியில் இருந்து அதி...
அத்துமீறி கூடாரங்கள் அமைத்திருந்த சிரியா அகதிகளின் கூடாரங்களை கிரேக்க விவசாயி ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்க விவசாயி ஒருவர் தமது நிலத்தில் அத்துமீறி கூடாரம் அமைத்திருந்த சிரியா அகதிகளின் கூடாரங்களை தனது டிராக்டர் கொண்டு இடித்து தள்ளியுள்ளார்.
தனது மாடுகளை அந்த நிலத்தில் கட்டுவதற்கு தோதாக அந்த நிலத்தை தயார் படுத்த வேண்டும், அதனாலே அகதிகளின் கூடாரங்களை அகற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமக்கு 70-80 கன்றுக்குட்டிகள் இருப்பதாகவும்...
தற்கொலை படை தாக்குதலால் சின்னாபின்னமான பிரஸெல்ஸ் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பெல்ஜியம் நாட்டின் பொலிஸ் கூட்டமைப்பு பிரஸெல்ஸ் விமான நிலைய நிர்வாகத்திடம் வைத்துள்ள கோரிக்கையில் பாதுகாப்பு அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் பாதுகாப்பை அதிகரிக்க செய்யவும் கோரியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் 22 ஆம் திகதி தற்கொலை படை தாக்குதலை அடுத்து பிரஸெல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு...
மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள சவுதி அரசின் நடவடிக்கையை பிரித்தானியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சவுதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 82 குற்றவாளிகளுக்கு சவுதி ஷாரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மரண...
குறைந்த விலையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையில் கனிய எண்ணெய வள தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மசகு எண்ணெயின் விலையை 25 வீதமாக குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பயங்கரவாதம் ஏற்படும் எனக் கூறி, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளில் படித்தவர்கள் ஈடுபடக் கூடாது எனவும் அமைச்சர்...
வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களுக்கு அன்பு வணக்கம். வடமாகாண சபையின் ஆளுநர் பதவியை வகிக்கும் தங்களுக்கு அவசரமாக இக்கடிதம் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்பதை முதலில் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற பதவி சமகால சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. அதிலும் தமிழ் மொழி தெரிந்த ஆளுநர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்களின் உணர்வு நிலைகளை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பது எங்களின்...
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றேனும் இதுவரையில் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனை பெறறுக் கொள்ளும் ஆணைக்குழுவிடம் தமது யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை.
பெரும்பான்மைக் கட்சிகளும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான சிறுபான்மை தமிழ்க் கட்சிகளும் உரிய வேளைக்குள் தத்தமது யோசனைகளை சமர்ப்பித்திருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சிகள் தனித்தோ, ஒன்றுபட்டோ எந்த யோசனைகளையும் முன்வைத்ததாக தெரியவில்லை.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில்...
நீர்க்கொழும்பு - கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் மூன்றும் உள்நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றும் மெகசின் இரண்டும் மற்றும் துப்பாக்கி ரவைகள் நான்கும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
பதினான்கு வயது பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வயோதிபரான கந்தையா சித்திவிநாயகம் என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபருக்கு நேற்று முன்தினம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி இந்த வல்லுறவு சம்பவம்...