முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சற்றுமுன்னர் கொழும்பு சீஐடி தலைமையகத்தில் முன்னிலையானார். யாழ். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவென்று அவர் இன்று சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கருத்தை பீரிஸ் செய்தியாளர்களை அவசரமாக சந்தித்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜி எல்லின் கருத்து...
அதிகபட்ச இளவயது திருமணங்கள் மட்டக்களப்பு, புத்தளம் மாவட்டங்களிலும் கொழும்பில் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பில் பணிபுரியும் 8 பெண்கள் அமைப்புகளின் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு, கடந்த மார்ச் 29, 2016 இல் நடைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய செயலமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர வின் விவாதங்களை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வரவேற்பதோடு...
தாம் இரட்டை வேடம் போடுவதாக பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் கொள்கையோடு கூடிய அரசியலை செய்கின்றோம். நாங்கள் பதவிக்காக, பணத்திற்காகவே அல்லது வேறு தேவைகளுக்காகவோ கொள்கைகளை விற்கவில்லை. நேற்று,...
தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு தடையாக அமையாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்கும் நடவடிக்கைகளை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாட்டுக்கு தடையாக அமையாது. இந்த செயற்பாட்டை இராணுவ மயமாக்கலை அகற்றுவது...
பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா அம்மையாரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. அவர் 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.  பி.சுசீலாவின் இந்தச் சாதனைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. தனித்தன்மை வாய்ந்த தனது...
இலங்கையின் தென்பகுதி கடற்பகுதியில் தொடர்ந்தும் கடற்படையினர் தமது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமையன்று குறித்த கடற்பகுதியில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்யும் வகையிலேயே இந்த தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அதனை கொண்டு வந்ததாக கூறப்படும் 10 ஈரானியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைதுசெய்யப்பட்டனர். ஏற்கனவே இவ்வாறான கடத்தல்களை மேற்கொண்டு இவர்கள், தென் அதிவேக பாதையின் ஊடாக தமது ஹெரோய்ன் விநியோகத்தை கொழும்புக்கு மேற்கொண்டு வந்திருக்கலாம்...
சுயநல அரசியலை நோக்காகக் கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கும் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி சுயலாபங்களை அடைந்து கொள்வதற்குமான முயற்சியில் இனவாத சக்திகள் முனைந்து வருகின்றன. தேசிய அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியை மீளக் கைப்பற்றி விடலாம் என்ற நப்பாசையில் மஹிந்த அணியினர் செயற்பட்டு...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ச உள்நாட்டு ரீதியான பயணங்களை மேற்கொண்டிருந்தார். பல கோடி ரூபா இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளின் போது...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில் அண்மையில் வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசாரே அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, தமது கட்சி உறுப்பினர்களையும் தாக்கியதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரத்தினத்துக்கு வீசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிசாருக்கும்...